சென்னை, நவ 7 வடகிழக்குப் பருவ மழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகி உள்ள நிலையில், இறந்த நபர்களது குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு உள்ளது.
வடகிழக்குப் பருவமழையின்போது உயிரிழந்த 26 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள் ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் 2 மனித உயிரிழப்புகளும், திருவாரூர் மாவட்டத்தில் ஒரு மனித உயிரிழப்பும் என மொத்தம் 3 மனித உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. வட கிழக்குப் பருவமழை காலத்தில் மொத்தம் 26 உயிரிழப்புகள் பதிவாகி உள்ள நிலையில், இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டு உள்ளது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் 250 மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டு மழைநீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. வருகிற 9-ஆம் தேதி இலங்கைக்கு அருகே தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற் றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும் என்றும், இது வட மேற்கு திசை யில் தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் இந்திய வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்புப்படை ஆயிரத்து 149 பேரும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப்படை 899 பேரும் தயார் நிலையில் உள்ளனர். 121 பல்நோக்கு பாதுகாப்பு மய்யங்களும், 5 ஆயிரத்து 93 நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment