புதுடில்லி, நவ. 18 இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு படிப் படியாக குறைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 635 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி யுள்ளது.
ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின் படி, "இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 635- பேருக்கு கரோனா உறுதி செய் யப்பட் டுள்ளது. நாட்டில் இதுவரை கரோனா உறுதி செய்யப் பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 67 ஆயிரத்து 311 ஆக உயர்ந் துள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 7,175 ஆக உள் ளது. கரோனா பாதிப்புக்கு மேலும் 11 பேர் உயிரிழந்துள் ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 546- ஆக உயர்ந் துள்ளது. கரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.79 சதவிகிதமாக உள்ளது. கரோனாவில் இருந்து 386- பேர் நேற்று குணம் அடைந் துள்ளனர். கரோனா பாதிப் புக்கு நாட்டில் இதுவரை போடப்பட்ட தடுப்பூசி களின் எண்ணிக்கை 219.83 கோடி டோஸ்கள் ஆகும்.
தமிழ்நாட்டில்....
தமிழ்நாட்டில் ஆண்கள் 34, பெண்கள் 28 என மொத்தம் 62 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென் னையில் 10 பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள் ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண் ணிக்கை 35 லட்சத்து 93,713 ஆக அதிகரித் துள்ளது. இதுவரை 35 லட்சத்து 55,086 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 88 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழ கம் முழுவதும் 578 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று நோய்த்தொற்று பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். சென்னையில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு 65 ஆகவும், சென்னையில் 11 ஆக வும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment