சென்னை, நவ. 27- தமிழறிஞர்களைச் சிறப்பிக்கும் வகையில் 24 வகை யான விருதுகளை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த விருது களுக்கு டிச.23-க்குள் விண்ணப்பிக் கலாம்.
இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சிமற்றும் செய்தித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழுக்கும், தமிழ் வளர்ச்சிக்கும் பாடுபடும் தமிழறிஞர்களைச் சிறப் பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு பல விருதுகளை வழங்கிசிறப்பித்து வருகிறது. அவ்வகையில், தமிழ்நாடு அரசின் 2023-ஆம் ஆண்டுக்கான திருவள்ளுவர் விருது மற்றும் 2022ஆ-ம் ஆண்டுக்கான 24 வகை யான விருதுகள் தற்போது அறிவிக் கப்பட்டுள்ளன.
2023-ஆம் ஆண்டுக்கான திரு வள்ளுவர் விருது மற்றும் 2022-ஆம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருது(3 விருதுகள்), பேரறிஞர் அண்ணாவிருது, பெருந் தலைவர் காமராஜர் விருது, பாரதி யார் விருது, பாவேந்தர் பாரதி தாசன் விருது, திரு.வி.க. விருது, கி.ஆ.பெ. விசுவநாதம் விருது, தமிழ்த் தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, உமறுப்புலவர் விருது, ஜி.யு.போப் விருது, இளங்கோவடிகள் விருது, அம்மா இலக்கிய விருது, சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது (10 விருதுகள்), சிங்காரவேலர் விருது, அயோத்திதாசப் பண்டிதர் விருது, மறைமலையடிகளார் விருது, அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது, காரைக்கால் அம்மையார் விருது, சி.பா.ஆதித்தனார் திங்களி தழ் விருது, தமிழ்ச் செம்மல் விருது கள் (38 விருதுகள் மாவட்டத்துக்கு ஒன்று வீதம்) உள்ளிட்ட 24 வகையான விருது வழங்கப்பட வுள்ளது.
விருதுக்கு விண்ணப்பிப்பவர் கள், உரிய ஆவணங்களுடன் லீttஜீs://ணீஷ்ணீக்ஷீபீs.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையவழி மூலமாகவோ அல்லது ‘இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும் பூர், சென்னை’ என்ற முகவரிக்கோ டிச. 23-ஆம் தேதிக்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும். உரிய காலத்துக்குள் பெறப்படாத விண் ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு முதலமைச்சர் விருது வழங்குவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment