'ஜி 20' சின்னத்தில் பிஜேபியின் தாமரை - காங்கிரஸ் கண்டனம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 10, 2022

'ஜி 20' சின்னத்தில் பிஜேபியின் தாமரை - காங்கிரஸ் கண்டனம்

புதுடில்லி, நவ. 10 ஜி20 மாநாட்டு சின்னத்தில் தாமரை இடம் பெற்றதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  இந்தியா தலைமை ஏற்று நடத்த உள்ள ஜி20 மாநாட்டின் சின்னம், இணையதளத்தை பிரதமர் மோடி  வெளியிட்டார். இந்த சின்னத்தில் உலக உருண்டை தாங்கும் பீடமாக தாமரை மலரும் இடம் பெற்றுள்ளது. இதற்கு பல்வேறு கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெயராம் ரமேஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘70 ஆண்டுகளுக்கு முன் காங்கிரஸ் கட்சி கொடியை தேசிய கொடியாக  மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்த போது பிரதமராக இருந்த நேரு அதை நிராகரித்தார்.   ஆனால், ஜி20 மாநாட்டின் அதிகாரப்பூர்வ சின்னமாக தாமரை வைக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. மோடியும், பாஜ.வும் தங்கள் கட்சியை முன்னிலைப்படுத்த, வெட்கமின்றி எதையும் செய்வார்கள் என்பது இதன்மூலம் உறுதியாகிறது,’ என குறிப்பிட்டுள்ளார்.


No comments:

Post a Comment