2035க்குள் விண்வெளி நிலையத்தை அமைக்க இஸ்ரோ திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, November 3, 2022

2035க்குள் விண்வெளி நிலையத்தை அமைக்க இஸ்ரோ திட்டம்

2035ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை அமைக்கும் இலக்குடன் செயல்பட்டு வருகிறது.

புவிவட்டப்பாதைக்கு அதிக எடை யுள்ள செயற்கைக் கோள்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட மறுபயன் பாட்டு ராக்கெட்டை துறைசார்ந்த நிறு வனங்களுடன் சேர்ந்து உருவாக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனம் (இஸ்ரோ) முயற்சி மேற்கொண்டு வருவதாக இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் தெரிவித்துள்ளார்.NGLV  என அழைக்கப்படும் அடுத்த தலை முறை ஏவுகணை வாகன ராக்கெட்டின் வடிவமைப்பில் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருவதாகவும், இதில் இஸ்ரோவுடன் ஒத்துழைக்க தொழில்துறையின் முன்வந்துள்ளதா கவும் அவர் கூறியுள்ளார்.

“வளர்ச்சித் திட்டங்களில் தொழில் துறையினரின் ஈடுபடுத்துவதே இதன் நோக்கம். இதன் மூலம் இதற்கான முத லீட்டை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம் அனைவருக்குமான வளர்ச்சிக்குத் தேவையான ராக்கெட் தொழில்நுட்பத்தை உருவாக்க தொழில் துறையினர் முதலீடு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம்” என்று சோமநாத் பிடிஅய் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். புவியின் குறைந்த சுற்றுப் பாதைக்கு 20 டன் எடையும் ஜியோஸ் டேஷனரி டிரான்ஸ்ஃபர் ஆர்பிட்டில் (GTO)  பாதைக்கு 10 டன் எடையும் சுமந்து செல்லக் கூடிய ராக்கெட்டை வடிவமைக்க திட்டிமிடப்பட்டுள்ளது என்றார்.மற்றொரு இஸ்ரோ அதிகாரி கூறுகையில், 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ள தால், ஆழமான விண்வெளி பயணங் கள், மனித விண்வெளி விமானங்கள், சரக்குப் பயணங்கள் மற்றும் பல தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் சுற்றுவட்டப்பாதையில் வைப் பது போன்றவற்றையும் கண்காணித்து வருவதால் புதிய ராக்கெட் உதவியாக இருக்கும் என்றார். NGLV ஆனது, விண்வெளிப் போக்குவரத்தை அதிக செலவு குறைந்ததாக மாற்றும், மொத்த உற்பத்திக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு எளிய, வலுவான இயந்திரமாகக் கருதப் படுகிறது.

இஸ்ரோ  NGLV இன் வடிவமைப்பை ஒரு வருடத்திற்குள் தயார் செய்து அதை உற்பத்திக்காக தொழில்துறைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது, முதல் ஏவுதல் 2030 இல் தற்காலிகமாக திட்டமிடப் பட்டுள்ளது. NGLV  என்பது மீத்தேன் மற்றும் திரவ ஆக்சிஜன் அல்லது மண் ணெண்ணெய் மற்றும் திரவ ஆக்சிஜன் போன்ற இயற்கை எரிபொருள் கலவை களால் இயக்கப்படும் மூன்று-நிலை ராக்கெட்டாக இருக்கலாம். மறுபயன் பாட்டு NGLV  ராக்கெட் மூலம் ஒரு கிலோ சுமந்து செல்ல இந்திய ரூபாயில் சுமார் 1.5 லட்சம் செலவாகும் (1900 USD) என்று சமீபத்தில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் சோம்நாத் கூறியிருந் தார்.

No comments:

Post a Comment