தமிழ்நாட்டில் 2015 ரேசன் கடைகளுக்கு அய்.எஸ்.ஓ. சான்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

தமிழ்நாட்டில் 2015 ரேசன் கடைகளுக்கு அய்.எஸ்.ஓ. சான்று

சென்னை, நவ.15 கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். ராதாகிருஷ்ணன் தலை மையில் Bureau of India Standard ISO  தரச்சான்றிதழ் தொடர்பான ஒரு நாள் பயிற்சி நடத்தப்பட்டது.

பின்னர் காமதேனு சிறப்பங்காடியால் நடத்தப்பட்ட கண்காட்சியினை பார்வை யிட்டு பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: 

தமிழ்நாட்டில் முதன்முதலில் ஆங்கி லேயர் காலகட்டத்தில் மதராசில் 1876 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வறட்சியின் காரணமாக பிரெட்ரிக் நிக்கோல்சன் அறிக்கை கோரப் பட்டதைத் தொடர்ந்து இந்தியாவிற்கே ஒரு முன்னோடியாக கடந்த 1904 ஆம் ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் திரூர் தொடக்க வேளண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கம் தொடங்கப்பட்டது. அதுமுதற்கொண்டு தற் போது 69 ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா 14.11.2022 முதல் 20.11.2022 வரை ஒவ்வொரு நாள்களும் ஒரு கருப்பொருளை மய்யமாக கொண்டு பலவிதமான நிகழ்ச்சிகள் நடத்தி சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை யின்படி, கூட்டுறவுத் துறை தமிழகத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. தமிழ் நாட்டில் இதுவரை 1.6 கோடி லட்சம் உறுப் பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட் டில் 22,923 பல்வேறு வகையாக கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. 22,690 பிரதம சங்கங்கள், 22,016 மய்ய சங்கங்கள் மற்றும் 17 தலைமைச் சங்கங்கள் ஆகிய வற்றின் வாயிலாக 67,000 கோடி வைப்பீடுகள் கொண்டு 67,000 கோடி அளவிற்கு பல்வேறு வகையான கடன்கள் வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக கடந்த ஆண்டு 10,292 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. இந் தாண்டு (2022-2023) பயிர்க் கடன் 12,000 கோடி நிர்ணயிக்கப்பட்டு இதுவரை 8.97 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.6,553 கோடி அளவிற்கு வழங்கப்பட்டுள்ளது. மார்ச் 2023 ஆம் ஆண்டுக்குள் நிர்ணயிக்கப்பட்ட குறியீடு அளவிற்கு கடன் வழங்கப்படும். மாவட்டங்களில் பெறப்படும் பொது மக்க ளின் கோரிக்கைக்கு ஏற்ப இந்தாண்டு 2.8 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு இதில் 1.48 லட்சம் நபர்களுக்கு ரூ.794 கோடி அளவிற்கு கடன் வழங்கப்பட்டுள்ளது. குறிப் பாக டெல்டா பகுதியில் 1.54 லட்சம் விவசாயிகளுக்கு குறுவை சாகுபடிக்கு ரூ.1072 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கால்நடை பாதுகாப்பிற்கு 1.68 லட்சம் நபர் களுக்கு ரூ.768 கோடி கடன் வழங்கப் பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க இந்தாண்டு தமிழ்நாட்டில் உள்ள 33,000 நியாயவிலைக் கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ் பெறுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்தாண்டு 3,662 கடைகளில் 2015 கடைகளுக்கு ISO தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

No comments:

Post a Comment