டிச.2 - சுயமரியாதை நாள்: தமிழர் தலைவர் பிறந்த நாள் மாவட்டம் முழுக்க சிறப்பாக நடத்திட வடசென்னை கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

டிச.2 - சுயமரியாதை நாள்: தமிழர் தலைவர் பிறந்த நாள் மாவட்டம் முழுக்க சிறப்பாக நடத்திட வடசென்னை கலந்துரையாடலில் முடிவு

சென்னை, நவ. 2- வடசென்னை மாவட்ட கழகக் கலந்துரையா டல் கூட்டம், 31.10.2022 அன்று மாலை 6.30 மணிக்கு, பெரியார் திடல் அன்னை நாகம்மையார் அரங்கத்தில் சிறப்பாக நடை பெற்றது.

வடசென்னை மாவட்ட அமைப்பாளர் புரசை சு.அன் புச்செல்வன் கடவுள் மறுப்புக் கூறினார். துணைத் தலைவர் கி.இராமலிங்கம் அனைவரை யும் வரவேற்று - கூட்டத்தில் கலந்துரையாடி முடிவெடுக்க வேண்டியவை பற்றிக் குறிப் பிட்டார். கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித்தார்.

தோழர்கள் உரை

கூட்டத்தில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக் கனி, சென்னை மண்டல செய லாளர் தே.செ.கோபால், மாவட்ட தலைவர் வெ.மு.மோகன், செயலாளர் தி.செ.கணேசன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, மாவட்ட இளைஞரணித் தலைவர் வழக் குரைஞர் தளபதி பாண்டியன் ஆகியோர் பேசி னர்.

2.12.2022 அன்று தமிழர் தலைவரின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவை வட சென்னையில் சிறப்பாகக் கொண்டாடுவது பற்றியும், கழகக் கொடியேற்றுதல், சுவ ரெழுத்துப் பிரச்சாரம், ‘விடு தலை' சந்தா சேர்த்தல், திருப்பத் தூரில் 17.12.2022 அன்று நடைபெறும் முப்பெரும் விழா வில் மாவட்டக் கழகத் தோழர் கள் பங்கேற்பது பற்றியும் விரி வாகப் பேசினர்.

திருவொற்றியூர் தலைவர் பெரு.இளங்கோ, செயலாளர் ந.இராசேந்திரன், புரசை சு.அன்புச்செல்வன், செம்பியம் கழக தலைவர் பா.கோபால கிருஷ்ணன், சு.அரவிந்த்குமார், பெரம்பூர் செயலாளர் மங்கள புரம் ஆ.பாசுகர், எண்ணூர் செயலாளர் பொ.இராமச்சந் திரன், க.கலைமணி சு.அரவிந்த் குமார் ஆகியோர் கழகப் பணி கள் பற்றிப் பேசினர்.

இக் கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

‘விடுதலை' சந்தா சேர்த்தல் - பிரச்சாரப் பணிகளில் மும்முரம்

தீர்மானம் 1: வடசென்னை மாவட்டத்திலுள்ள திருவொற்றியூர், ஆர்.கே.நகர், இராயபுரம், பெரம்பூர், திரு.வி.க. நகர், கொளத்தூர், துறைமுகம், அண்ணாநகர் ஆகிய சட்டமன்றத் தொகுதி உறுப்பினர்கள், மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள், அனைத் துக் கட்சிப் பொறுப்பாளர்கள், வணிகப் பிரமுகர்கள், தொழில திபர்கள் மற்றும் பொதுநல உணர்வாளர்களிடமிருந்து ‘விடுதலை' ஏட்டுக்குச் சந்தாக் களைப் பெற்று, தமிழர் தலை வர் ஆசிரியர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் பரிசாக வழங்குவதென முடிவுசெய்யப் படுகிறது.

தீர்மானம் 2: டிசம்பர் 2 -- சுயமரியாதை நாள் - தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவை வடசென்னை மாவட்டம் முழுதும் சிறப்பாகக் கொண் டாடுவதோடு - பொதுக்கூட்டம், தெருமுனைக் கூட்டங்கள், சுவரெழுத்துப் பிரச்சாரம் ஆகியனவற்றைச் சிறப்பாகச் செய்து கொள்கைப் பிரச்சார விழாவாக கொண்டாடுவது என முடிவு செய்யப்படுகிறது.

தீர்மானம் 3: 4.11.2022, ஹிந்தித் திணிப்பை எதிர்த்து சென்னையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் வடசென்னை மாவட்டததின் அனைத்துக் கழகத் தோழர்களும பங்கு பெற்று எழுச்சியுடன் நடத்துவது எனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் 4: டிசம்பர் 2இல் சென்னையில் நடைபெறும் தமிழர் தலைவர் பிறந்த நாள் விழாவிலும், டிசம்பர் 17இல் திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் வட சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள் குடும்பம் குடும்ப மாகப் பங்கேற்றுச் சிறப்பிப்ப தெனத் தீர்மானிக்கப்படுகிறது.

புதிய செயலாளர்

வடசென்னை மாவட்ட இளைஞரணி செயலாளர் சதீஷ் உடன் இணைந்து பணி யாற்றுவதற்கு - மற்றொரு செயலாளர் பொறுப்புக்கு சு.அரவிந்த் குமார் என துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி அறிவிப்பு செய்தார்.

நிறைவாக திராவிட மாணவர் கழக மாவட்ட தலைவர் த.பரிதின் நன்றி கூறினார்.

No comments:

Post a Comment