1957 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்று உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் - தமிழர் தலைவர் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, November 27, 2022

1957 ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் சிறை சென்று உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கப் பொதுக்கூட்டம் - தமிழர் தலைவர் சிறப்புரை

திருவொற்றியூர், நவ. 27- தந்தை பெரியாரின் ஆணைக்கிணங்க ஜாதி ஒழிப்புப் போராட் டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்தப் போராளிகளுக்கு வீரவணக்கப் பொதுக் கூட்டம் 26.11.2022 சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவொற்றியூர் பெரியார் நகர் பெரியார் சிலை அருகில் தமிழர் தலைவர், கழகத் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுச்சியுரையாற்ற மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இப்பொதுக்கூட்டத்திற்கு வடசென்னை மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் தி.செ.கணேசன், பொதுக்குழு உறுப்பினர் தி.வே.சு.திருவள்ளுவன், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சோ.சுரேசு, தே.ஒளி வண்ணன், பா.பாலு, வடசென்னை மாவட்ட இளைஞரணி தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் இரா.சதீசு, பகுதி துணைச் செயலாளர் மு.ஜான்சன், மாதவரம் கழக அமைப்பாளர் சி.வாசு, கண்ணதாசன் நகர் கழக அமைப்பாளர் க.துரை முன்னிலை வகித்தனர்.

திருவொற்றியூர் பகுதி செயலாளர் ந.இரா சேந்திரன் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். சென்னை மண்டல கழக செயலாளர் தே.செ.கோபால் தொடக்கவுரை யாற்றினார்.

அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்கள் உரை

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திரு வொற்றியூர் தொகுதியின் துணைச் செயலா ளர் அ.உலக முதல்வன் கொள்கைப் பாடல் களைப் பாடினார். மாவட்ட தி.மு.க. பிரதிநிதி பி.எஸ்.சைலஸ், தி.மு.க. பேச்சாளர் வாசு கருணாநிதி, திருவொற்றியூர் மேற்குப் பகுதி தி.மு.க. செயலாளர் வை.ம.அருள்தாசன், கிழக்குப் பகுதி செயலாளரும், மாநகராட்சி மண்டல குழு தலைவருமான தி.மு.தனியரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநகராட்சி 4ஆவது வட்ட உறுப்பினர் ஆர்.ஜெயராமன், கழக துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி, கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோர் உரையாற்றினர்.

தமிழர் தலைவர் எழுச்சிப் பேருரையாற்றினார்

நிறைவாக தமிழர் தலைவர், கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் ஜாதி ஒழிப்புப் போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி எழுச்சிப் பேருரையாற்றினார்.

தமிழர் தலைவர் தமது உரையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு திருவொற்றியூர் பகுதிக்கு வந்துள்ளது தமக்குப் பெருமகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டார். 

"மேலை நாடுகளில் இல்லாத வகையில் இங்குள்ள வருண - ஜாதி பேதத்தைப் போக்க தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில் பங்கேற்று, சிறைக் கொடு மைகள் அனுபவித்தும், உயிர் நீத்தும் மறை யாமல் வாழ்ந்து கொண்டுள்ள வீரர்களின் தொண்டறம் இணையற்ற ஒன்றாகும்" என்றார்.

தந்தை பெரியாரின் வைக்கம் போராட்ட வரலாற்றை விரிவாக எடுத்துக் கூறினார். ஜாதி ஒழிப்புக் களத்தில் அரசமைப்புச் சட்டம் தந்த அம்பேத்கரின் பணிகளை விளக்கினார். தந்தை பெரியாரின் விருப்பத்தை நிறைவேற்ற முத்தமிழறிஞர் கலைஞர் - அனைத்து ஜாதியினர் அர்ச்சகர் பிரச்சினையில் காட்டிய அக்கறையை எடுத்துக் கூறினார்.

"ஆர்.எஸ்.எஸ். முகமூடியில் ஜாதி - வருணப் பாதுகாப்பு ஆட்சி நடத்தும் பிரதமர் மோடியை ‘வளர்ச்சி நாயகன்‘ என்று பாஜக வினர் கூறுவது நகைப்புக்குரியது" என்றார். 

"அனைத்து குடிமக்களின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் செலுத்தப்படும்" என்ற மோடியின் வாக்குறுதி என்னாயிற்று என்று கேள்வி எழுப்பினார்.

சமூக நீதிப் பிரச்சினையில் ஏழை ஜாதி என்று தனியாகப் பாகுபடுத்துவதா? - மற்ற ஜாதியினரில் ஏழைகளே இல்லையா என்று கேள்வி எழுப்பி - அது அரசமைப்புச் சட்டத் திற்கு விரோதமானது என்பதை ஆணித் தரமாகக் குறிப்பிட்டுப் பேசினார். இவற்றிற் கெல்லாம் விடையாக தமிழினப் பெருமக் களே! விழிப்புணர்வு பெறுங்கள் என்றுகேட்டு தமது உரையை நிறைவு செய்தார். (முழு உரை பின்னர் வெளிவரும்).

‘விடுதலை' சந்தா வழங்கினர்

நிகழ்ச்சியில் தமிழர் தலைவருக்கு, தி.மு.க. வைச் சேர்ந்த தி.மு.தனியரசு, வை.ம.அருள் தாசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து ‘விடுதலை' சந்தா வழங்கினர். அவர்களுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்துப் பாராட்டினார்.

மதிமுக பகுதிச் செயலாளர் மு.இரகு நாதன், அனைத்து கிராம ஒருங்கிணைப்பு சங்கத்தின் தலைவர் வி.கே.ஏழுமலை மற்றும் தி.மு.க,, ம.தி.மு.க., வி.சி.க., கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்துக் கட்சிப் பொறுப்பா ளர்கள், கழகப் பொறுப்பாளர்கள், மகளிரணித் தோழர்கள் ஏராளமானோர் தமிழர் தலை வருக்கு சால்வை, பயனாடை அணிவித்துப் புத்தகங்களை வழங்கினர்.

மாணவியருக்குப் பரிசுகள்

முன்னதாக பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் பங்கேற்ற எண்ணூர் அரசினர் மகளிர் மேனிலைப் பள்ளி மாணவியர் எம்.அனிதாவிற்கு முதல் பரிசினையும், பிரவீனா, ஆர்.திவ்யதர்சினிக்கு இரண்டாம், மூன்றாம் பரிசினையும் தமிழர் தலைவர் வழங்கினார். ரொக்கம், பள்ளிப் பை, புத்தகங் களை பரிசாக வழங்கிய கழகத் தலைவர் ‘நன்றாகப் படியுங்கள்' என ஊக்கம் அளித்து அம்மாணவியருக்கு வாழ்த்து கூறினார்.

தமிழர் தலைவருக்கு கழக மகளிர் பிறந்த நாள் வாழ்த்து

கழகத் தலைவருக்கு 90ஆம் ஆண்டு பிறந்த நாள் வாழ்த்தினை முன்னரே தெரிவிப்பதாகக் கூறிய மகளிர் - 100 ஆண்டுகள் வாழ்ந்திட நெஞ்சார வாழ்த்துவாக வாழ்த்தி ந.சத்தியா, வி.மணியம்மாள், ந.அனியா மற்றும் மகளிர்கள் தமிழர் தலைவருக்குப் பொன்னாடை அணிவித்து - "உலர் உணவுப் பொருள்கள் தொகுப்பு" மகிழ்ச்சியுடன் வழங் கினர். மாவட்டத் தலைவர் வெ.மு.மோகன் பேத்தியான ந.அனியாவை விசாரித்துத் தமிழர் தலைவர் அன்புடன் தட்டிக் கொடுத் தார்.

பட்டொளி வீசிப் பறந்த கழகக் கொடிகள்

இப்பொதுக்கூட்டம் முன்னிட்டும், கழகத் தலைவரை வரவேற்கும் விதமாகவும் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் 2 கிலோ மீட்டர் தூரத்திற்குக் கட்டப்பட்டிருந்த கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன.

சுங்கச் சாவடி அருகில்  உற்சாக வரவேற்பு

தண்டையார்பேட்டை சுங்கச் சாவடி அருகில் கழகத் தோழர்களும், இளைஞரணியினரும் திரண்டு உற்சாக ஒலி முழக்கம் இட்டு - கழகத் தலைவருக்கு வரவேற்பு அளித்த  அனைவரும் கழகக் கொடிகளோடு இரு சக்கர வாகனங்களின் அணிவகுப்புடன், தமிழர் தலைவரை மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர்

திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில ப.க. பொதுச் செயலாளர் ஆ.வெங்க டேசன், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், நகர செயலாளர் சு.மோகன்ராஜ், மாடம்பாக்கம் அ.கருப்பையா, ‘விடுதலை' நகர் பி.சி.ஜெயராமன், தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர் அரும்பாக்கம் சா.தாமோதரன், ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் பூவை.க.தமிழ்ச்செல்வன், அமைப்பாளர் உடுமலை வடிவேல், க.கலைமணி, ஆவடி மு.ரவீந்திரன், ஆர்.முருகேசன், மு.இரா.மாணிக்கம், வடசென்னை மாவட்ட துணைத் தலைவர் கி.இராமலிங்கம், அமைப்பாளர் புரசை சு.அன்புச்செல்வன், துணை அமைப் பாளர் சி.பாசுகர், இளைஞரணி செயலாளர் சு.அரவிந்த் குமார், எண்ணூர் பகுதி தலைவர் மு.மணி காளியப்பன், செயலாளர் பொ.இராமச்சந்திரன், திருவொற்றியூர் பகுதி துணைச் செயலாளர் சே.தமிழரசி, புது வண்ணை செயலாளர் சு.செல்வன், கெ.கவுதம், அ.அம்பேத்கர், தி.தொ.கழகம் ஆ.துரைராவணன், மா.சேகர், வண்ணை ஆ.வெங்கடேசன், பா.பாலு, நா.பார்த்திபன், தி.முரளி, எண்ணூர் பகுதித் தோழர்கள் தி.ந.கண்ணன், டேவிட் அந்தோணி, செந்தில், சோ.இராமு, மா.இலட்சுமணன், தே.சங்கர், மகளிரணித் தோழர்கள் பொன்னேரி செல்வி, இரா.வளர்மதி, வி.தென்னரசி, மு.செல்வி, மு.இந்திரா, அ.கோட்டீஸ்வரி, ஆர்.தமிழ்ச் செல்வி மற்றும் பொன்னேரி கழக தலைவர் வே.அருள், அ.எழில், கோ.வினோத்குமார் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் இறுதியாக திருவொற்றியூர் பகுதி தலைவர் ஓவியர் பெரு.இளங்கோ நன்றி கூறினார்.

No comments:

Post a Comment