19ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

19ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

புதுடில்லி. நவ.2 அகில இந்திய வங்கிப் பணியாளர்கள் சம்மேளனம் சார்பில் தேவிதாஸ் துல்ஜபுர்கார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிவிப்பில் வங்கி ஊழியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளில் வங்கி நிர்வாகங்கள் தானாகவே முடிவுகளை எடுக்கின்றனர். ஊழியர்களிடம் அதனைப் பற்றி பேசவோ அல்லது கலந்து முடிவு எடுக்கும் வழக்கத்தை கைவிட்டு விட்டனர்.

மேலும் இருதரப்பு தீர்வு தொடர்பான அனைத்து விதிமுறைகளையும் மீறி வருகின்றனர். ஒன்றிய அரசின் தொழிலாளர் நலத்துறை பிறப்பிக்கும் உத்தரவுகளை வங்கி நிர்வாகங்கள் ஒருபொழுதும் கடைப் பிடிப்பது இல்லை.மேலும் வங்கி நிர்வாகப் பணியாளர் உறவை அலட்சியமாக நினை கின்றனர். பேங்க் ஆப் மகாராட்டிரா ,பேங்க் ஆப் பரோடா ,பேங்க் ஆப் இந்தியா ,பெடரல் வங்கி சோனாலி வங்கி ,கத்தோலிக் சிரியன் வங்கி ,கனரா வங்கி ஆகிய வங்கிகளின் நிர்வாகங்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் வங்கி ஊழி யர்களிடையே பரவலான கலக்கம் ஏற்பட் டுள்ளது. அதனால் அனைத்து வங்கிகளிலும் உள்ள அகில இந்திய வங்கிப் பணியாளர் சம்மேளனத்தின் உறுப்பினர்கள் வருகிற 

19ஆம் தேதி அன்று ஒருநாள் வேலை நிறுத் தத்தில் ஈடுபடவுள்ளனர் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது


No comments:

Post a Comment