சென்னை,நவ.15- வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக வரும் 18- ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓருரி இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவான காற்ற ழுத்த தாழ்வு பகுதியால் தமிழ்நாட்டில் பல் வேறு மாவட் டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் அதிக அளவில் கனமழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. கடலோர மாவட் டங்கள் அதிக மழை பெய்து வருகின்றன. குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றி யுள்ள மாவட்டங்கள் கடந்த சில நாட்களாக கனமழையை எதிர் கொண்டு வருகின்றன. தமிழ் நாட் டில் கடந்த ஓரிரு வாரங்களாகவே விடாமல் மழை பெய்து வருவதால் மாநிலத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளிலும் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரில் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி அந்தமான் கடல்பகுதிகள் மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளுக்கு செல்ல வேண் டாம் என்று அறிவுறுத்தப்பட் டுள்ளது. இந்நிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த சில நாட்களில் டெல்டா மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்து வருகிறது. சென் னையை பொறுத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தகவல் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment