மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 16 இந்திய மாலுமிகள் சிறை வைப்பு - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 16 இந்திய மாலுமிகள் சிறை வைப்பு - மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்

புதுடில்லி, நவ 9- மத்திய ஆப் பிரிக்க நாட்டில் சிறை வைக்கப்பட்டு உள்ள 16 இந்திய மாலுமிகளை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. 

இந்தியாவை சேர்ந்த 16 மாலுமிகள், இலங்கை மாலுமிகள் 8 பேர் உள் பட 26 பேருடன் 'எம்.டி. ஹெராயிக் இடன்' என்ற எண்ணெய் கப்பல் கடந்த ஆகஸ்டு 12ஆம் தேதி மத் திய ஆப்பிரிக்க நாடான இகுவாடரியல் கினியா கடற்பகுதியில் சென்று கொண்டிருந்தது. இந்த கப்பலை அந்த நாட்டு கடற்படையினர் சுற்றி வளைத்து சிறைப்பிடித்த னர். எண்ணெய் திருட் டில் ஈடுபட்டதாக இந்த நடவடிக்கை மேற் கொள் ளப்பட்டதாக தெரிகி றது. இதனால் கடந்த சுமார் 3 மாதங்களாக இந்திய மாலுமிகள் உள் பட 26 பேரும் சிறை வைக்கப்பட்டு உள்ளனர். இது அவர்களது குடும்பத் தினருக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த நிலையில் இகு வாடரியல் கினியாவில் சிறை வைக்கப்பட்டுள்ள தங்களை உடனடியாக மீட்குமாறு இந்திய மாலு மிகள் காணெலி காட்சிப் பதிவு வெளியிட்டு உள் ளனர். இது வைரலாக பரவி வருகிறது. இந்த மாலுமிகளை உடனடி யாக மீட்குமாறு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு மாநிலங் களவை நாடாளுமன்ற உறுப்பினர். ரகீம் கடிதம் எழுதியுள்ளார். மேலும் இந்திய விவகாரத்தில் அவசரமாக தலையிட்டு தீர்வு காணுமாறு தனது டுவிட்டர் தளத்திலும் வேண்டுகோள் விடுத்துள் ளார். இதற்கிடையே இகுவாடரியல் கினியா வில் சிறை வைக்கப்பட் டுள்ள 16 மாலுமிகளை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அங்குள்ள இந்திய தூத ரகம் கூறியுள்ளது. 

இது தொடர்பாக தூதரகம் தனது டுவிட்டர் தளத்தில், '16 மாலுமிகளை விரைவாக மீட்பதற்கு நமது தூதரகமும், அபுஜா வில் உள்ள துணை தூதர கமும் இகுவாடரியல் கினியா மற்றும் நைஜீரிய அதிகாரிகளுடன் தொடர்ந்து பேசி வருகி றோம். அனைத்து மாலு மிகளும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது அவர்கள் தடுப்புக்காவல் மய்யத்தில் இருந்து கப்ப லுக்கு மாற்றப்பட்டு உள் ளனர்' என குறிப்பிட்டு உள்ளது. அந்த மாலுமிக ளுடன் தொடர்ந்து தொலைப்பேசி மூலம் தொடர்பில் இருப்பதாக கூறியுள்ள தூதரகம், அவர்களை தொடர்ந்து தூதர்கள் சந்தித்து வருவ தாகவும் கூறியுள்ளது.


No comments:

Post a Comment