ராமேஸ்வரம் நவ 18 இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் விடுவிக்கப்பட்டனர். ராமேசுவரத்தில் இருந்து கடந்த 5-ஆம் தேதி அந்தோணிராயப்பு, கிறிஸ்டோபர் ஆகியோருக்கு சொந்தமான 2 விசைப்படகுகளில் ராமேசுவரம் மற்றும் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வவுனியா சிறையில் அடைத்தனர். அவர்களது 2 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இலங்கை சிறையில் இருந்த 15 பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 15 மீனவர்களையும் விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட படகுகளின் உரிமையாளர்கள் ஆவணங்களுடன் வருகிற 25-ஆம் தேதி ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். இதைதொடர்ந்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேரும் இந்திய தூதரகத்தில் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். விரைவில் அவர்கள் விமானம் மூலம் தமிழ்நாடு அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Friday, November 18, 2022
இலங்கை சிறையில் இருந்து ராமேசுவரம் மீனவர்கள் 15 பேர் விடுவிப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment