புதுடில்லி,நவ.2- அக்டோபர் 2022-க்கான ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.1,51,718 கோடியாக உள்ளது. இதில் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.26,039 கோடி யாகவும், மாநில அரசுகளின் ஜிஎஸ்டி வருவாய் ரூ.33,396 கோடியாகவும், மத்திய - மாநில அரசுகளின் ஒருங் கிணைந்த ஜிஎஸ்டி வருவாய் ரூ.81,778 கோடியாகவும், செஸ் வரிவருவாய் ரூ.10,505 கோடியாகவும் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஏப்ரல் 2022-க்கு அடுத்தபடியாக 2ஆவது அதிகபட்ச வருவாய் ஈட்டிய மாதமாக அக்டோபர் 2022 திகழ்கிறது. அதேபோல் ரூ.1.50 லட்சம் கோடிக்கு மேல் மொத்த ஜிஎஸ்டி வருவாய் வசூலாகியிருப்பது, இது 2ஆவது முறையாகும்.
மேலும், உள்நாட்டு பணப்பரிமாற்றத்திலும், ஏப்ரல் 2022க்கு அடுத்தபடியாக, அக்டோபர் 2022 அதிகபட்ச வருவாய் ஈட்டியிருக்கிறது. இதுவரை மாதாந்தர ஜிஎஸ்டி வரி வருவாய், ரூ1.4லட்சம் கோடியைத் தாண்டிய 9 மாதங்களில், அக்டோபர் மாதம் 8ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாநிலங்களைப் பொருத்தவரை, ரூ.23,037 கோடி ஜிஎஸ்டி வருவாயை ஈட்டி, அக்டோபர் மாதம் அதிக வருவாய் ஈட்டிய மாநிலங்களின் பட்டியலில் மகாராட் டிரா முதல் இடத்தில் உள்ளது.
அக்டோபர் 2022-க்கான தமிழ்நாட்டின் ஜிஎஸ்டி வரி வருவாய் ரூ.9,540 கோடியாகவும், புதுச்சேரியின் ஜிஎஸ்டி வரிவருவாய் ரூ.204 கோடியாகவும் உள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment