சிம்லா, நவ 6- இமாச்சலப் பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட் டுள்ள நிலையில், 4.11.2022 அன்று அங்கு காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பொதுச்செய லாளர் பிரியங்கா காந்தி பேசினார், ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதம் ரூ.1500 உதவித் தொகை உள்பட பல வாக்குறுதி களை வழங்கினார்.
இமாச்சலப் பிரதே சத்தில் வரும் 12ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 8-ஆம் தேதி நடை பெற உள்ளது.
இதையடுத்து, அங்கு காங்கிரஸ், பாஜக இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரம் மேற் கொண்டுள்ள பிரியங்கா காந்தி, அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது, இமாச்ச லப் பிரதேசத்தை ஆளும் பாஜகவை கடுமையாக சாடியவர், பாஜக ஆட்சி யின் கீழ் மாநிலம் கடனில் மூழ்கியுள்ளது என்றும், 63,000 அரசுப் பணியிடங் கள் காலியாக உள்தாக தெரிவித்தவர், இமாச்ச லப் பிரதேசத்தில் காங் கிரஸ் ஆட்சியமைத்தால் ஒரு லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கு வோம் என்றும், பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்து வோம் என்றும், குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1500 ரூபாய் வழங்குவோம் என்றும் வாக்குறுதி அளித்தார்.
தற்போது காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் சத் தீஸ்கர் மற்றும் ராஜஸ்தா னில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து பேசியவர், இளைஞர் களின் எதிர்காலத்தை பாழாக்கும் போதைப் பொருட்களை ஒழிக்க காங்கிரஸ் கட்சி போரா டும் என்றதுடன், ஒவ் வொரு சட்டமன்றத் தொகுதியிலும் ஆங்கில வழிப் பள்ளிகளைக் கட் டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதேபோன்று இமாச் சலப் பிரதேசத்திலும் தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும் என உறுதி அளித்தார்.
ராஜஸ்தானில் உள்ள காங்கிரஸ் அரசு 1.30 லட் சம் வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. “காங் கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல் அமைச்சரவை கூட்டத்தில் இமாச்சலப் பிரதேச இளைஞர்க ளுக்கு 1 லட்சம் வேலை வழங்குவதற்கான முடிவை இறுதி செய்யும் என உத்தரவாதம் அளித் தவர், வீட்டிலும் வெளி யிலும் பணிபுரியும் பெண் கள் சுமக்கும் சுமையை தனக்குப் புரிகிறது என்று அதனால்தான் ஒவ் வொரு பெண்ணுக்கும் மாதாந்திர நிதியுதவியாக ரூ.1,500 வழங்க காங்கிரஸ் விரும்புகிறது. இந்த திட் டம் ‘ஹர் கர் லட்சுமி யோஜ்னா’ என்று அழைக் கப்படுகிறது,” என்று அவர் கூறினார்.
No comments:
Post a Comment