தமிழ்நாட்டில் புதிதாக 144 பேருக்கு கரோனா பாதிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 2, 2022

தமிழ்நாட்டில் புதிதாக 144 பேருக்கு கரோனா பாதிப்பு

சென்னை, நவ 2 தமிழ்நாட்டில் நேற்று ஆண்கள் 86, பெண்கள் 58 என மொத்தம் 144 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 36 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழ்நாட்டில் பாதிப்பு எண் ணிக்கை 35 லட்சத்து 92,187 ஆக அதி கரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 52,647 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 254 பேர் குணமடைந்து  சென்றனர். தமிழ்நாடு முழுவதும் 1,492 பேர் சிகிச்சையில் உள் ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் இல்லை. தமிழ்நாட்டில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 152 ஆகவும், சென்னையில் 38 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment