மேட்டுப்பாளையம், நவ. 2- தந்தை பெரியா ரின் 144ஆவது பிறந்த நாள் விழா வினையொட்டி மேட்டுப்பாளை யம் - குட்டைப்புதூரில் பெரியார் கபடிக் குழு மற்றும் திராவிடர் கழக இளைஞரணி சார்பாக கபடி போட்டிகள் நடைபெற்றன.
16.9.2022 அன்று மாலை 7.30 மணிக்கு குட்டைப்புதூரில் முதலா வதாக தந்தை பெரியார் படத் திறப்பு நடைபெற்றது. தொடக்க விழாவிற்கு மாவட்டக் கழக காப் பாளர் சாலைவேம்பு சுப்பையன் தலைமை தாங்கினார். தந்தை பெரியார் படத்தை திறந்து வைத்து கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மாவட்ட தலைவர் சு.வேலுசாமி, மாவட்ட செயலாளர் கா.சு.அரங்க சாமி, காரமடை ஒன்றிய தலைவர் ஏ.எம்.ராஜா, மேட்டுப்பாளையம் நகர கழக செயலாளர் வெ.சந்திரன் முன்னிலை வகித்தனர்.
பெரியார் செல்வன் தனது உரையில்: "கபடி வீரர்கள் ஒழுக் கதை கடைப்பிடிக்க வேண்டும், மது புகை போன்ற போதைக்கு ஆட்பட்டு விடக்கூடாது. தலை சிறந்த வீரர்கள் எல்லாம் இத்தகைய பழக்கங்களால் சீரழிந்து போயுள் ளனர்" என்றும், தந்தை பெரியார் உழைப்பு, சிந்தனை, பகுத்தறிவு குறித்தும் உரையாற்றினர்.
16.9.2022 துவங்கி 18.9.2022 அதிகாலை 3 மணிக்கு போட்டிகள் நிறைவு பெற்றன. முதல் பரிசை தேக்கம்பட்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், இரண்டாவது பரிசை சந்திரசேகர் நினைவு கபடிக் குழு தோலம்பாளையம் அணியும், மூன் றாவது பரிசை லைவ் ஸ்போர்ட்ஸ் கிளப் குறிச்சி அணியும், நான்காவது பரிசை கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி அணியும் பெற்றன.
போட்டிகளுக்கான ஏற்பாடு களை மாவட்ட இளைஞர் அணி செயலாளர் பிரதீப், மற்றும் நாரா யணன், பெரியார் கபடிக் குழுவினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
No comments:
Post a Comment