இ.பெ.தமிழீழம் - கு.இராஜ்குமார் இணையேற்பு விழா: தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்!
காரைக்குடி, நவ.26 தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் பழைய இராமநாதபுரம் மாவட்ட திராவிடர் கழகச் செயலாளராகப் பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி - பேராண்டாள் இணையர்கள் ஒரே கொள்கை, ஒரே கொடி, ஒரே தலைமை என வாழ்ந்து, தனது திருமணத்தை 1940ஆம் ஆண்டிலேயே சுயமரியாதைத் திருமணமாக செய்து, அதன் பிறகு இவரது குடும்பத்தில் தொடர்ந்து 18 சுயமரியாதைத் திருமணங்கள் நடத்தப்பட்டு, அதில் 11 ஜாதி மறுப்பு (காதல்) திருமணமும், நடைபெற்றது. தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் இணைந்து மூன்று திருமணங்களும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் ஏழு திருமணங்களையும், பொதுச் செயலாளர் அன்புராஜ் ஒரு திருமணத்தையும் நடத்தி வைத்தனர். இவற்றில் ஒன்பது மண விழா காதல் திருமணங்கள்.
காரைக்குடி பகுதியில் நான்கு தலைமுறையாகத் தொடரும் கழகக் குடும்பத்தில் 12ஆவது ஜாதி மறுப்புத் (காதல்) திருமணமாக, சென்னை பெரியார் திடலில் 20 ஆண்டுகள் கழகத் தொடர்புப் பணிகளைச் செய்தவரும், திராவிடர் கழக அறக்கட்டளை மற்றும் பொதுக்குழு உறுப் பினர், சாமி.திராவிடமணி - செயலட்சுமி ஆகியோரின் மகனும், `உண்மை’- `பெரியார் பிஞ்சு’ பொறுப்பாசிரியராக இருந்த தி.பெரியார் சாக்ரடீசு- ஜெ.இங்கர்சால் ஆகியோரின் அன்பு மகள், சென்னை அரும்பாக்கம், டி.ஜி.வைஷ்ணவக் கல்லூரியின் ஆங்கில உதவிப்பேராசிரியர் பணிபுரியும் இ.பெ.தமிழீழத்திற்கும், திருவண்ணாமலை மாவட்டம், தேவனாம்பட்டு கி.குழந்தை - லதா ஆகியோரின் மகனும், சென்னை, தாம்பரம், சிறீ சாயிராம் பொறியியற் கல்லூரி ஆங்கில உதவிப் பேராசிரியருமான கு.இராஜ் குமாருக்கும், 20.11.2022 ஞாயிற்றுக்கிழமையன்று முற்பகல் 11 மணியளவில், சென்னை பெரியார் திடல், நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் வாழ்விணையேற்பு விழாவை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று மணமக்களுக்கு உறுதிமொழி ஒப்பந்தங் களை கூறி நடத்தி வைத்தார். மணமக்களும் மலர் மாலையினையும் கணையாழியையும் சூட்டிக் கொண்டனர். இந்தக் குடும்பத்தின் சிறப்பே தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிபேசும் மணமக்களாக திகழும் திராவிடக் குடும்பமாகும். மணமக்களுக்கு வாழ்த்துகள் வழங்கி திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், “இனமுரசு” நடிகர் சத்யராஜ், திராவிட இயக்கத் தமிழர் பேரவைப் பொதுச்செயலாளர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திரைப்படக் கவிஞர் அறிவுமதி, “நக்கீரன்” ஆசிரியர் கோபால், சிவகங்கை மாவட்ட கழக தலைவர் வழக்குரைஞர் ச.இன்பலாதன் ஆகியோர் வாழ்த்துரை யாற்றினார்கள்.
விழாத் தொடக்கத்தில், திராவிடர் கழகச் சொற்பொழி வாளர் தி.என்னாரெசு பிராட்லா நான்கு தலைமுறையாக திராவிடர் கழகத்தில் தொடரும், திராவிடக் குடும்பத்தைப் பற்றி விரிவாகப் பேசினார். திராவிடர் கழக அறக்கட்டளை உறுப்பினரும், கழகப் பொதுக்குழு உறுப்பினரும் மணமகளின் தாத்தாவுமான சாமி.திராவிடமணி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தி.பெரியார் சாக்ரடீசை உற்ற பெற்றோராக பேணிக் காத்த பாங்கினையும், அவர் மீது பாசமுடன் பழகி, பெரியார் திடலில் ஊடகப் பொறுப்பும் தந்து பணி புரியும் வாய்ப்பையும் வழங்கிய ஆசிரியர் அய்யாவுக்கு தங்கள் குடும்பம் நன்றி யுடன் இருந்து வருவதையும் எடுத்துக் கூறினார். அத்துடன் மணமக்களுக்கு வாழ்த்து மடல் அனுப்பிய, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், இந்திய அரசின் மேனாள் உள்துறை, மற்றும் நிதித்துறை அமைச்சர் ப.சிதம்பரம் எம்.பி., சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை பேராசிரியர், தேவக்கோட்டை சுப.திண்ணப்பன், அமெரிக்க பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் டாக்டர் சோம.இளங்கோவன், செயலாளர் காரைக்குடி இலக்குவன் தமிழ், மும்பை மாநில தி.க. தலைவர் பெ.கணேசன் (காரைக்குடி), கருநாடக மாநில கழக தலைவர் மு.சானகிராமன் (காரைக்குடி), திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரி முதல்வர் செந்தாமரை ஆகியோரின் மடல்களை மேடையில் படித்தார். மேலும் அன்று காலை பெரியார் திடலுக்கு வருகை தந்த “குடிநீர்க் காவலர்” தமிழின உணர்வாளர் காரைக்குடி பழ.கருப்பையா மணமக்களை நேரில் வாழ்த்தியதுடன், அவரின் நூலான “சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்“ எனும் புத்தகத்தை வழங்கினார். மணவிழாவிற்கு முன்னதாக, சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லாவின் மகன் பொறியாளர் ஜா.எ.டார்வின் தமிழ் மணமக்களை அறிமுகம் செய்து பேசினார். வாழ் விணையேற்பு விழாவை, திராவிட மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னரெசு பெரியார் தொகுத்து வழங்கினார்.
பங்கேற்றோர்
தமிழர் தலைவரின் வாழ்விணையர் வீ.மோகனா அம்மையார், சுதா அன்புராஜ், கழகப் பொருளாளர் வீ.குமரேசன், பொதுச்செயலாளர்கள் வீ.அன்புராஜ், தஞ்சை இரா.ஜெயக்குமார், துணைப்பொதுச் செயலாளர் இன்பக்கனி, மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், அமைப்புச் செயலாளர்கள் பொன்னேரி பன்னீர்செல்வம், தர்மபுரி ஊமை செயராமன், கழகத் தகவல் தொழில்நுட்பக் குழு செயலாளர் வி.சிவில்வம், சென்னை மண்டல செயலாளர் தே.சே.கோபால், மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, சிவகங்கை மண்டல தலைவர் இராமேசுவரம் சிகாமணி, செயலாளர் கி.மகேந்திரராசன், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் அ.அமர்சிங், மாநில மகளிரணி அமைப்பாளர் ந.தேன்மொழி, மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் ம.கவிதா. ப.க. மாநில தலைவர் த.தமிழ்ச்செல்வன், பெரியார் மருத்துவர் குழும இயக்குநர் இரா.கவுதமன், பாரதிதாசன் பல்கலைக்குழக மேனாள் துணைவேந்தர் பெ.ஜெகதீசன், கழக வெளியுறவுச் செயலாளர் கோ.கருணா நிதி, திராவிட வரலாற்று ஆய்வு பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன், பெரியார் சுயமரியாதை திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், விடுதலை அச்சக மேலாளர்
க.சரவணன், பெரியார் மருத்துவக் குழும செயலாளர் டாக்டர் மீனாம்பாள், ஆடிட்டர்கள் அர.இராமச்சந்திரன், குடந்தை சண்முகம், திராவிடன் நல நிதி நிறுவன மேலாளர் அருள் செல்வன், தஞ்சை குடும்ப விளக்கு நிதி நிறுவன மேலாளர் வேணுகோபால், வழக்குரைஞரணி இணைச் செயலாளர்
கோ.சா.பாஸ்கர், மாநில வழக்குரைஞரணி செயலாளர் வழக் குரைஞர் த.வீரசேகரன், தென்சென்னை மாவட்ட தலைவர் வில்வநாதன், செயலாளர் பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட ப.க. தலைவர் கோவி.கோபால், விருதுநகர் மாவட்ட தலைவர் இல.திருப்பதி, வழக்குரைஞர் சு.குமாரதேவன், “நக்கீரன்” கோவி.லெனின், சென்னை ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், “மின்னம்பலம்” ஆசிரியர் அ.காமராசு, திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்து ராமன், புதுக்கோட்டை திமுக பொறுப்பாளர் சந்திரசேகர், எழுத்தாளர் அஜயன் பாலா, சென்னை மாஜிஸ்திரேட்
ச.பரமசிவம், காரைக்குடி தொழில் வணிகக் கழக செயலாளர் எஸ்.கண்ணப்பன், பொருளாளர் கே.என்.சரவணன், இணைச் செயலாளர்கள் கந்தசாமி, நாச்சியப்பன், சையது, செயற்குழு உறுப்பினர்கள் சத்தியமூர்த்தி, அருணகிரி, ந.செல்வராசன், (ப.க. செயலாளர்), வல்லம் பெரியார் உயராய்வு மய்ய இயக்குநர் நம்.சீனிவாசன், பெரியார் வீர விளையாட்டுக் கழக மாநில தலைவர் ப.சுப்பிரமணியம், வெற்றிச்செல்வி பூங்குன்றன் மற்றும் காரைக்குடி கழகத் தோழர்கள் வீ.பாலு, ஆ.சுப்பையா, சி.சூரியமூர்த்தி, நா.பாபு, சுப.பரமசிவம், ஆ.பாலகிருஷ்ணன், மகளிரணி செயலாளர் அமுதா பழனிவேல், வேம்பத்தூர் ஜெயராமன், வீர முருகப்பன், அ.கோவிந்தராசன், சிவ.தில்லைராசா, சிவகங்கை மண்டல தலைவர் சிகாமணி, மண்டல செயலாளர் மகேந்திரராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment