தொங்கு பாலம் விபத்து: குடும்பத்தில் 12 பேரை இழந்த பி.ஜே.பி. எம்.பி. - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 1, 2022

தொங்கு பாலம் விபத்து: குடும்பத்தில் 12 பேரை இழந்த பி.ஜே.பி. எம்.பி.

ஆமதாபாத், நவ.1 குஜராத்தின் மோர்பி நகரில் வரலாற்று சிறப்புமிக்க தொங்கு பாலம் கடந்த 30ஆ-ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) திடீரென இடிந்து விழுந்தது. பாலத்தில் 500-க்கும் மேற்பட்டோர் இருந்ததால் அதிக பாரம் தாங்கா மல் அந்த கேபிள் பாலம் இடிந்து விழுந்துள்ளது.இந்த நிகழ்வில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரி ழந்தும், பலர் மீட்கப்பட்டும் உள்ள னர். சிலர் சிகிச்சையில் உள்ளனர். தொடர்ந்து மீட்பு, நிவாரண பணிகள் நடந்து வருகின்றன. தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 150-க்கும் மேற் பட்டோர் உயிரிழந்த நிலையில் ஆற்றின் அடியில் சிக்கியுள்ள உடல்களை மீட்கும் பணி  தொடரு கிறது. இதற்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக் கப்பட்டு தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மீட்புப்பணி குறித்து தேசிய பேரிடர் மீட்புப்படை அதிகாரி வி.வி.என். பிரசன்ன குமார் கூறு கையில், 

"ஆற்றின் அடியில் சிலரது உடல்கள் இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதற்காக ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பெற்ற வீரர்கள் வரவழைக்கப்பட்டு மீட் புப் பணிகள் தீவிரமாக தொடர்ந்து நடந்து வருகின்றன" என்று கூறி னார். 

இந்திய கடற்படை, கடலோர காவல்படை, தேசிய பேரிடர் மீட் புப்படை மற்றும் உள்ளூர் நிறுவ னங்கள் என பல குழுக்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

 விபத்தில் 12 உறவினர்களை பறிகொடுத்த பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்

தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் இதுவரை 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் அவர்களில், ராஜ்கோட் தொகுதி பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் மோகன்பாய் குந்தாரி யாவின் தங்கை குடும்பத்தினர் 12 பேர் உயிரிழந்திருப் பது தெரியவந் துள்ளது. இந்த விபத் தில் 12 உற வினர்களை பறிகொடுத்த மோகன் பாய் குந்தாரியா கூறுகையில், தொங்கு பாலம் அறுந்து விழுந்த விபத்தில் தனது சகோதரி குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்த நிகழ்வு மிகவும் வேதனை அளிக் கிறது. பாலம் விபத்துக்கு காரண மான குற்றவாளிகள் யாராக இருந் தாலும் அவர்கள் தண்டிக்கப்படு வார்கள். மீட்புப் பணிகளில் நேரடி யாக ஈடுபட்டுள்ள அவர், தனது கண் முன்பே ஆற்றில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்டவர்களின் உடல்கள் எடுக்கப்பட்டதாக சோகத்துடன் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment