சென்னை,நவ.2- வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளை விலை ரூ.116.50 குறைந்து ரூ.1,893-க்கு விற்பனை செய்யப்படுகிறது. உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியதையடுத்து, கச்சா எண்ணெய் விலை அதிகரித்து பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சமையல் எரிவாயு உருளைவிலை பன்மடங்கு உயர்ந்தது. தற்போது கச்சா எண்ணெய் விலை குறையத் தொடங்கி யதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கும் மேலாக பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படாமல் உள்ளது.
இந்நிலையில், வர்த்தகப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் குறைத்துள்ளன. இதன்படி, 19 கிலோ எடையுள்ள உருளையின் விலை ரூ.116.50 குறைந்துள்ளது. இதனால், அதன் விலை ரூ.2,009.50இல் இருந்து ரூ.1,893 ஆகக் குறைந்தது. கடந்த மே 19க்குப் பின்னர் 7ஆவது முறையாகக் குறைக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வீட் டில் சமையல்செய்ய பயன்படுத்தப்படும் உருளையின் விலையில் மாற்றம் இன்றி ரூ.1,068.50-க்கு விற்கப்படுகிறது.
No comments:
Post a Comment