தமிழ்நாட்டில் மேலும் 114 பேருக்கு கரோனா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

தமிழ்நாட்டில் மேலும் 114 பேருக்கு கரோனா

சென்னை, நவ. 7 தமிழ்நாட்டில் ஆண்கள் 59, பெண்கள் 55 என மொத்தம் 114 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  தமிழ்நாட்டில் நேற்றைய கரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல் வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழ்நாட்டில் புதிதாக 59 ஆண்கள், 55 பெண்கள் உள்பட மொத்தம் 114 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள் ளது. அதிகபட்சமாக சென்னையில் 29 பேர், செங்கல்பட்டில் 11 பேர் உள்பட 27 மாவட் டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் அமெரிக்காவில் இருந்து வந்த 2 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. மேலும், 12 வயதுக்குட்பட்ட 28 குழந்தைகளுக்கும் , 60 வயதுக்கு மேற்பட்ட 22 முதியவர்களுக்கும்  கரோனா தொற்று உறுதி செய்யப்பட் டுள்ளது. மருத்துவமனையில் 218 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழ்நாட்டில்  கரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது கரோனா பாதிப் புக்குள்ளாகி 1,055 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் ... 

 இந்தியாவில் கடந்த பல வாரங்களாக கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் மேலும் 1,132- பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 14,839- ஆக குறைந்துள்ளது. கரொனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத் தில் 14 பேர் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. அதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 500- ஆக உயர்ந்துள்ளது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடும் போது சிகிச்சையில் உள்ள வர்களின் எண்ணிக்கை விகிதம் 0.03 சதவிகிதமாக உள்ளது. கரோனாவில் இருந்து குணம் அடைந்தோர் விகிதம் 98.78 சதவிகிதமாக உள்ளது. நாட்டில் இதுவரை 219.72 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.



No comments:

Post a Comment