தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவை ரூ.11,186 கோடியை உடனே வழங்க வேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 28, 2022

தமிழ்நாட்டுக்கான ஜிஎஸ்டி நிலுவை ரூ.11,186 கோடியை உடனே வழங்க வேண்டும்

தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தல்

சென்னை,நவ.28- தமிழ்நாட்டுக் கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ரூ.11,185.82 கோடியை உடனடி யாக வழங்க வேண்டும் என்று, ஒன்றிய நிதிநிலை அறிக்கை தொடர்பான கூட்டத்தில் தமிழ் நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வலியுறுத்தினார்.

2023_-2024ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஒன்றிய நிதிய மைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், மாநில நிதியமைச் சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் டில்லியில் 26.11.2022 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசிய தாவது: 

ஒன்றிய அரசு தொடர்ந்து செஸ் மற்றும் கூடுதல் வரியை உயர்த்தி வருகிறது. இது நிதிக் கூட்டாட்சிக்கு எதிராக உள்ள தால், மாநிலங்கள் பாதிக்கப்படு கின்றன. எனவே, ஒன்றிய அரசு அடிப்படை வரி விகிதத்துடன் செஸ் மற்றும் கூடுதல் வரியை இணைத்து, மாநிலங்கள் போதிய வரிப் பங்கீட்டைப் பெற வழிவகை செய்ய வேண்டும். ஒன்றிய அர சின் திட்டங்களுக்கு, தமிழ்நாட் டுக்கு அதிக நிதிப் பங்கை வழங்க வேண்டும். கரோனா பரவல் காரணமாக, எதிர்பார்க்கப்பட்ட வருவாயில் பாதிப்பு ஏற்பட்டுள் ளது. எனவே, இழப்பீட்டு நிலு வையான ரூ.11,185.82 கோடியை ஒன்றிய அரசு உடனடியாக விடு விக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட் டுக்கான காலவரம்பை மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்க வேண்டும்.

இதுதவிர, தமிழ்நாட்டில் குறிப்பிட்ட 5 திட்டங்களுக்கு, 15ஆவது நிதி ஆணையம் பரிந் துரைத்த ரூ.2,200 கோடியை நிபந்தனைகளின்றி உடனடியாக விடுவிக்க வேண்டும். மேலும், 15ஆவது நிதி ஆணையம் சென்னை வெள்ளத் துயர் தணிப்பு பணிக்காக ரூ.500 கோடியை வழங்கப் பரிந் துரைத்தது. 2 ஆண்டுகளான பின்னரும் நிதி விடுவிக்கப்பட வில்லை. அதை விடுவிக்க வேண் டும். நகர்ப்புறம், கிராமப்புறங் களில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்துக்கான ஒன்றிய அரசின் பங்களிப்பை உயர்த்தவேண்டும். முதியோர் ஓய்வூதியம், வித வைகள், மாற்றுத் திறனாளி களுக்கான உதவித் தொகை களுக்கு ஒன்றிய அரசின் பங்கை உயர்த்தி வழங்க வேண்டும்.

சென்னை மெட்ரோ ரயில் 2ஆம் கட்ட திட்டப் பணிக்கு ஒன்றிய, மாநில அரசுகளின் பங்காக தலா 50 விழுக்காட்டுக்கு ஒப்புதல் அளிப்பதுடன், ஒன்றிய பட்ஜெட்டிலும் அதற்கு வழி வகை செய்ய வேண்டும். ரயில்வே நிதிநிலை அறிக்கையில் தமிழ் நாட்டுக்கு அதிக திட்டங்களை வழங்குவதுடன், போதிய நிதி யையும் ஒதுக்க வேண்டும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை விரை வில் அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.  -

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment