சென்னைக்கு 11ஆம் தேதி கனமழை எச்சரிக்கை: - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 8, 2022

சென்னைக்கு 11ஆம் தேதி கனமழை எச்சரிக்கை:

சென்னை,நவ.8- வரும் 11ஆம் தேதி சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் சென்னை மாநகராட்சி வேண்டுகோளை ஏற்று சென்னை, புறநகர் ஏரிகளின் நீர் மட்டத்தைக் குறைக்கும் நடவடிக்கையில் நீர்வள ஆதாரத் துறை ஈடுபட்டுள்ளது. வங்கக் கடலில் இலங்கையை ஒட்டி நாளை (9.11.2022) புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும், அதன் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 9, 10ஆம் தேதிகளில் மிதமான மழையும், 11ஆம் தேதி கனமழையும் பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மய்யம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டு சென்னை, புறநகர் பகுதிகளிலிருந்து வெளியேறிய நீரால் பெரு வெள்ளம் ஏற்பட்ட நிலையில், அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் மாநகரப் பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளில்உள்ள ஏரிகளின் நீர்மட்டத்தைக் குறைத்து வைக்குமாறு மாநகராட்சி சார்பில் நீர்வள ஆதாரத் துறைக்கு வேண்டுகோள் வைக்கப்பட்டது. குறிப்பாக, சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் மட்டுமல்லாது, மாநகரப் பகுதிக்குள் உள்ள கொரட்டூர், மாதவரம், கொளத்தூர், வேளச்சேரி, ஆதம்பாக்கம் போன்றபெரிய ஏரிகளில் நீர் அளவையும் குறைத்து வைக்குமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகளை நீர்வள ஆதாரத் துறை மேற்கொண்டு வருவதாகவும் மாநகராட்சி உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


No comments:

Post a Comment