ஆதித்தமிழர் பேரவை தலைவர் இரா. அதியமான்
சென்னை,நவ.10- ஆதித்தமிழர் பேரவையின் நிறுவனர் தலைவர் இரா.அதியமான் 8.11.2022 அன்று வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு வழங்கிய 10 சதவிகித இட ஒதுக் கீடை உச்ச நீதி மன்ற அய்வர் குழுவில் மூன்று நீதி பதிகள் (3:2) உறுதி செய்திருப்பதற்கு ஆதித் தமிழர் பேரவை தனது எதிர்ப் பைத் தெரிவித்துக் கொள்கிறது.
ஒன்றிய பாஜக அரசு பொறுப்பேற்றதிலிருந்து OBC மற்றும் SC/ST மக்களுக்கான இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத் துவதில் பல இடங்களில் அலட் சியம் காட்டி வந்திருக்கிறது இப்போது வரை IIT,IIM, IISC போன்ற உயர் கல்வி நிறுவனங் களில் இட ஒதுக்கீடு பின்பற்றப் படாமல் உயர் வகுப்பினரே அனுபவித்து வருவதை காண முடிகிறது.
இந்த நிலையில் தான் மாதத் திற்கு ரூ.65,000 ஈட்டும் உயர் வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை அறிவித்தது ஒன்றிய பாஜக அரசு.
இது சமூக நீதிக்கும் சமத் துவத்திற்கும் எதிரான மாபெரும் அநீதியாகும் 10 சதவிகித இட ஒதுக்கீடு என்பது சமுதாய தீண் டாமையை கடைப்பிடிக்கும் அயோக்கியத்தனமான நடை முறை.
7.11.2022 அன்று வழங்கிய தீர்ப்பில் அய்வர் குழுவில் இடம் பெற்ற தலைமை நீதிபதி யுயு லலித் மற்றும் ரவீந்தர பட் ஆகியோரின் கருத்து மிக முக்கியம் பெறுகிறது அதில் "10 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட விரோதம். இரட்டை சலுகை வழங்கும் சட்டத் திருத்தம் செல்லாது" என்றும்
நாட்டில் உள்ள ஏழைகளில் பெரும்பான்மையினர் ஷிசி/ஷிஜி மற்றும் ளிஙிசி யினர் உள்ளனர். இவர்களை இந்த 10% சதவீதத்தில் தவிர்த்திருப்தை ஏற்க முடியாது " என்றும் கூறியிருப்பது முக்கியம் பெறுகிறது.
3 சதவிகித அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை உறுதி செய்ய இழுத்தடிக்கும் உச்ச நீதி மன்றம் இதற்கு விரைவில் தீர்ப்பு வழங்கி இருக்கிறது.
சட்டம் எளியவரை எட்டி உதைப்பதும், வலியவர்க்கு வளைந்து கொடுப்பதையும் கண் முன்னே இந்த தீர்ப்பு காட்டியிருக்கிறது.
சமூக நீதியை சீர் குலைக்கின்ற இந்த உயர் வகுப்பினருக்கான வழங்கிய மூவர் குழு தீர்ப்பு வெகுசன மக்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியது இதற்கு எதிர்வினையான சமூக நீதிக்கான குரல் இந்திய அளவில் ஓங்கி ஒலித்து உச்ச நீதி மன்றம் மூவர் அளித்த தீர்ப்புக்கு மறுபரிசீலனை செய்ய முன் வர வேண்டும் என ஆதித்தமிழர் பேரவை சார்பில் கூறிக்கொள்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment