சீராய்வு மனு அவசியம்!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை
உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புக் குறித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை வருமாறு:
உயர்ஜாதி ஏழைகளுக்கான இட ஒதுக்கீடு செல் லும் என்று இன்று (7.11.2022) ஓய்வுபெறும் தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையில் உள்ள அரசியல் அமர்வு அளித்துள்ள - 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லும் என்ற பெரும்பான்மைத் தீர்ப்பு என்பது அரசமைப்புச் சட்டத்தின் அடிக்கட்டு மான சமூகநீதித் தத்துவத்திற்கு நேர் முரணானது.
இந்தப் பொருளாதார அடிப்படையில் அது செல் லாது என்ற மண்டல் குழு தொடர்பான 9 நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பிலிருந்து - தப்பிக்கவே 103 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தமே - அடிக்கட்டு மானத்திற்கு விரோதமானதாகும் என்பதால், இது ஒடுக்கப்பட்ட பசியேப்பக்காரனை வெளியே தள்ளி, புளியேப்பக்காரனான முன்னேறிய ஜாதி ஏழைகளை உள்ளே விருந்துக்கு அனுப்பும் சமூக அநீதியாகும்!
இதனை நியாயப்படுத்திட எந்தப் புள்ளி விவரமும், ஆதாரமும் கிடையாது.
இதன்மீது சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட வேண்டியது அவசியம்! அவசியம்!!
அவசரம்!! அவசரம்!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.11.2022
குறிப்பு: இதே நவம்பர் 7 ஆம் தேதியன்றுதான் (1990) மண்டல் குழுப் பரிந்துரை அடிப்படையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்த பிரதமர் சமூகநீதிக் காவலர் மாண்புமிகு வி.பி.சிங் ஆட்சியினை பார்ப்பன சக்திகள் (பி.ஜே.பி.) கவிழ்த்தனர் என்பது குறிப் பிடத்தக்கது.
(விரிவான முழு அறிக்கை பின்னர் வெளிவரும்)
No comments:
Post a Comment