நியூயார்க், நவ. 25-- மற்ற முன் னணி மென்பொருள் நிறு வனங்களை தொடர்ந்து கூகுள் நிறுவனமும் அதிர டியாக 10,000 ஊழியர்க ளைப் பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உலகம் முழுவதும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்கள் செலவுகளை சமாளிப்பது, இழப்பை சரிசெய்வது போன்ற பல்வேறு காரணங்களால் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. தற் போது பொருளாதார சூழல் சரியில்லாத கார ணத்தினால் செலவுக ளைக் குறைப்பதற்காகவே ஆட்குறைப்பு நடவடிக் கைகளில் அந்த நிறுவனங் கள் ஈடுபடுவதாக கூறப் படுகிறது. அண்மையில் பிரபல சமூக வலைத்தள நிறுவனமான ட்விட் டரை எலான் மஸ்க், கைப்பற்றிய உடனேயே ஆட்குறைப்பு நடவடிக் கையை தான் முதலில் செய்தார். உயர் அதிகாரி கள் தொடங்கி ஊழியர் கள் வரை 50 விழுக்காட் டைத் தாண்டியது பணி நீக்கம். இதேபோல், மைக் ரோசாஃப்ட் நிறுவனமும் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.
அத்துடன் அமே சான், மெட்டா போன்ற நிறுவனங்களும் இதே காரணங்களுக்காக ஆட் குறைப்பு நடவடிக்கை களில் இறங்கினர். இந்த சூழலில் கூகுள் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணி யாற்றும் சுமார் 10,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள் ளது. கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்ப பெட் பல மாதங்களாக ஊழியர்களைப் பணி நீக் கம் செய்யாமல் தொடர்ந்து எச்சரிக்கை மட்டுமே விடுத்து வந்தது.
இந்த நிலையில், தற் போது சுந்தர் பிச்சை தலைமையிலான ஆல்ப பெட் நிர்வாகம் சுமார் 10,000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப் படுகிறது. அமெரிக்க மத் திய வங்கி வட்டி விகி தத்தை உயர்த்தியதில் இருந்து பெருநிறுவனங் கள் பல இடையூறுகளை எதிர்கொண்டு வருகின் றன. இதனால் டெக் மற் றும் டிஜிட்டல் சேவை நிறுவனங்களின் வருவாய் பெரிய அளவில் சரிந்து வருகிறது. இதைச் சமா ளிக்கவே ட்விட்டர், அமேசான், நெட்பிளிக்ஸ், மைக்ரோசாஃப்ட், மெட்டா, போன்ற டெக் நிறுவனங்கள் அடுத் தடுத்து ஆட்குறைப்பு செய்து வருகின்றன. மற்ற நிறுவனங்களைக் காட்டி லும் கூகுளின் தற்போ தைய நிலைமை மோச மாக - பணிநீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளதாக போர்ப்ஸ் பத்திரிக்கை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment