விலக்கி வைப்பதை இந்திய அரசமைப்புச் சட்டம் அனும திப்பதில்லை என்பதை மாண் பமை நீதிபதிகளின் வலுவான மறுப்பு அடிக்கோடிட்டுக் காட்டு கிறது. அனைத்து ஜாதியினரிலும், வகுப்பாரிலும் ஏழைகள் இருக் கின்றனர். "அரசமைப்புச் சட்டப் படி ஏழைகள் சம மாக நடத்தப்படுவார்களா?" என்பது முக்கியமான கேள்வி.
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்ட மைப்பை அறிவார்ந்த முறையிலும், இரக்கத்துடனும் புரிந்து கொள்ள வேண்டிய காலகட்டத்தில் நாம் இருக் கிறோம். மாண்பமை நீதிபதிகளுக்குள் மாறுபட்ட கருத்து ஏற்பட்டுள்ள இந்த விவகாரத்தை மறுபரிசீலனை செய்ய உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் என்று நான் நம்புகிறேன்.
மேனாள் நிதியமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ப. சிதம்பரம்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு நூற்றாண்டுகால சமூக நீதி போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு. இட ஒதுக்கீடு சமூக ஒடுக்குமுறைக்கு எதிராக, சம வாய்ப் புகளை உருவாக்கவும், ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை அதிகாரப்படுத் தவும் உருவாக்கப்பட்டது.
சமூக ஒடுக்குமுறையைக் கருத்தில் கொள்ளாமல், பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீட்டை நியாயப் படுத்துவது அரசியல் சாசனத்திற்கு முரணானது. ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அநீதி இழைப்பது. இடஒதுக்கீட்டுக் கொள்கையை நீர்த்துப் போகச்செய்வது.
- எஸ்.ஜோதிமணி, நாடாளுமன்ற உறுப்பினர், காங்கிரஸ்
“பொருளாதார ரீதியாக பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டின் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பொருளாதார அடிப் படையில் ஒதுக்கீட்டை அணுகுவதில் இருந்து பலரை விலக்கி வைக்கிறது. 3க்கு 2 என்னும் நீதிபதிகளின் மாறுபட்ட தீர்ப்பு என்பது கவனிக்கப்பட வேண்டியது. பொருளாதாரத்தில் நலிந்தோ ருக்கான இட ஒதுக்கீடு அளவுகோலும் தன்னிச்சையானது. இந்தத் தீர்ப்பு உண்மையான பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு உதவாது”காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம்
தந்தை பெரியார் சொல்வார், நாம் வழக்குரைஞர்களாக வரும்போது, அவர்கள் நீதிபதிகளாக ஆகி விடு வார்கள்.
- பீட்டர் அல்போன்ஸ், காங்கிரஸ்
No comments:
Post a Comment