பெரியார் 1000 வினா -விடைப் போட்டி பரிசளிப்பு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 7, 2022

பெரியார் 1000 வினா -விடைப் போட்டி பரிசளிப்பு விழா

கன்னியாகுமரி, நவ.7 குமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில்  பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம், பெரியார் சிந் தனை உயராய்வு மய்யம்  சார்பாக  பெரியார் ஆயிரம் வினா விடைப்  போட்டி  சிறப்பாக நடந்தது. ஏராளமான மாணவர்கள் பங்கேற்று  ஆர்வமுடன் தேர்வு எழுதினர். 

இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு மாவட்ட அளவில் இரண்டு மற்றும் மூன் றாவது  பரிசுகள் வழங்கும் விழா தக்கலை அமலா கான்வென்ட் மகளிர்  மேல்நிலைப் பள்ளி, அமலா கான்வென்ட் மெட்ரிக் மேல் நிலைப் பள்ளி, மாடத்திட்டுவிளை புனித லாரன்ஸ் மேல்நிலைப்  பள்ளிகளில்  வைத்து நடைபெற்றது.  பள்ளிகளுக்கு  மாவட்ட கழகத் தலைவர் மா.மு சுப்பிரமணியம்,  பகுத்தறிவாளர் கழகமாவட்ட தலைவர் உ.சிவதாணு தலைமை தாங்கி மாணவர் களுக்குப் பரிசுகள் வழங்கினர்.  மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பகுத் தறிவாளர் கழக மாவட்ட செயலாளர் 

எம்.பெரியார்தாஸ் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். 

கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன்   விழாவினை ஒருங்கிணைத்து மாண வர்களுக்குப்  பரிசுகள் வழங்கினார். தோழர்  முத்துவைரவன் மற்றும் ஏராளமான பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர். மாவட்ட அளவில் 2 ஆம் பரிசு வென்ற மாணவி கவுசிகாவுக்கு  ரூ.3000 (அமலா கான்வென்ட் மகளிர் மேல்நிலைப்பள்ளி),  3 ஆம் பரிசு பெற்ற மாணவி தாரகாவுக்கு  ரூ.2000 ( அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி) வழங்கப்பட்டன.  வெற்றி பெற்ற மாணவ  மாணவியருக்குப் பரிசுகளாக மாவட்ட கழகம் சார்பாக பரிசுத்தொகை, பெரியாருடைய நூல்கள் வழங்கப்பட்டன. பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகம்  சார்பாக மாணவர் களுக்குச்  சான்றிதழ்கள், பதக்கங்கள், புத்த கங்கள் வழங்கப்பட்டன. பள்ளிகளுக்கு பெரியார் படம் வழங்கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர்கள்,  தமிழ் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment