திருப்பத்தூர், நவ.18 திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் 1000 ‘விடுதலை' சந்தாக்களை டிசம்பர் 17 இல் நடை பெறும் முப்பெரும் விழாவில் இராண் டாம் கட்டமாக ‘விடுதலை' சந்தா வழங்கும் நிகழ்வில் வழங்குவது என்று 15.11.2022 அன்று நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது. அதன் அடிப்படையில் விடுதலை சந்தா சேர்ப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு நகர கடைவீதிகளிலும், தெருக் களிலும் சந்தா சேர்க்கும் பணியில் பயணிக்கிறது.
வாய்ப்புள்ள தோழர்கள் குழுவுடன் இணைந்து சந்தா சேர்ப்பில் ஈடுபடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
அதே போன்று தங்கள் பகுதியில் சந்தாக்களை வசூலிக்க விடுதலை சந்தா சேர்ப்பு குழுவுடன் இணைந்து சந்தாக்களை சேர்ப்போம்.
‘விடுதலை' சந்தா சேர்ப்புக்குழு தோழர்கள்:
கலைவாணன், சிற்றரசன், தமிழ்ச் செல்வன், மோகன், ராஜேந்திரன், சுரேஷ் குமார், பாண்டியன், முருகன், புகழேந்தி, சங்கர், உலகன்.
நாட்கள் மிக குறைவு.
இணைந்து பயணிப்போம்!
இலக்கை அடைவோம்!!
விடுதலையை பரப்புவோம்!!!
சமத்துவ சமுதாயத்தை படைப் போம்!!!!
மாவட்ட திராவிடர் கழகம், திருப்பத்தூர்
No comments:
Post a Comment