நாகர்கோவில், நவ.27- நாகர்கோவில் கார்மல் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் மணியம்மை பல்கலைக் கழகம் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யம் சார்பாக பெரியார் 1000 வினா - விடைப் போட்டி நடந்தது. இதில் வெற்றிபெற்ற மாணவர் களுக்கு மாவட்ட அளவில் பரிசுகள் வழங்கும் விழா அந்த பள்ளியில் வைத்து நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மா.மு.சுப்பிரமணியம், தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள், சான்றிதழ்கள், நூல்கள் வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ச.நல்லபெருமாள், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் விழாவினை ஒருங்கிணைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்கள், நூல்கள் வழங்கினார். இந்திய ஸ்டேட் வங்கி மேனாள் மேலாளர் அ.அசோக் மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் பங்கேற்றார். தமிழாசிரியர் டோமினிக் மற்றும் ஏராளமான பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகளாக மாவட்ட கழகம் சார்பாக பெரியா ருடைய நூல்கள் வழங்கப்பட்டன. பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் சார்பாக மாணவர் களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்கள், புத்தகங்கள் வழங்கப்பட்டன. பள்ளிக்கு பெரியார் படம் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment