விருதுநகர், நவ.27 விருதுநகர் மாவட்ட பகுத்தறி வாளர் கழகம் சார்பில், சாத்தூர் கே.ஏ.பி. திருமண மண்டபத்தில், 11.11.2022 வெள்ளி பிற்பகல் 3 மணியளவில், பெரியார் 1000 வினா - விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.
தமிழ்மொழி வாழ்த்துடன் தொடங்கிய விழா விற்கு சாத்தூர் நகர் மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட ப.க. அமைப்பாளருமான பா.அசோக் அவர்கள் தலைமை ஏற்று உரையாற்றினார். மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன் முன்னிலையில், திராவிட மாணவர் கழகத் தோழர் அ.அன்புமணிமாறன் அனைவரையும் வரவேற் றார். பெரியார் 1000 போட்டியில், மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கம்மவார் மேல்நிலைப் பள்ளி நிர்வாகி ரவிச்சந்திரன், கலை இலக்கியப் பெரு மன்றப் பொறுப்பாளர் நவநீதகிருஷ்ணன், ஜெ.சி.அய். தலைவர் வெண்மணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விருதுநகர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்ற கம்மவார் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.சாதனாதுர்கா மற்றும் சாத்தூர் நகரில் போட்டியில் பங்கேற்ற ஆறு பள்ளிகளில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு மாநில ப.க. துணைத் தலைவரும், பெரியார் 1000 போட்டி ஒருங்கிணைப்பாளருமான கா.நல்லதம்பி பரிசுகள் வழங்கி உரையாற்றினார்.
சாத்தூர் நகர் மன்றத் தலைவர் ச.குருசாமி பள்ளிகளுக்கான தந்தை பெரியார் படம் வழங்கி வாழ்த்துரை வழங்கினர்.
நிறைவாக திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி அவர்கள் பெரியார் 1000 போட்டி நோக்கம் குறித்தும், மாணவர்கள் பள்ளிப் படிப்புடன் பகுத் தறிவு சிந்தனையுடன் படித்து முன்னேற வலி யுறுத்தி சிறப்புரையாற்றினார்.
இறுதியாக பெரியார் 1000 போட்டி பணிகளில் இணைந்து பணியாற்றிய தி.மு.க. அய்.டி.விங்க் மாவட்ட அமைப்பாளர் ரா.வேலுச்சாமி நன்றி கூற விழா நிறைவுற்றது. விழாத் தலைவரும், நகர் மன்றத் துணைத் தலைவரும், மாவட்ட ப.க. அமைப்பாளருமான பா.அசோக் விழா ஏற்பாடு களை சிறப்புற செய்திருந்தார்.
No comments:
Post a Comment