சென்னை, நவ.18 பெரியார் மணியம்மை பல் கலைக்கழகம், பெரியார் சிந்தனை உராய்வு மய்யம், இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா- விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திருப்பூர், காரைக்குடி, கரூர் மாவட்டங்களில் பரிசளிப்பும் மற்றும் பள்ளி களுக்குத் தந்தை பெரியார் படங்களும் வழங்கப்பட்டன.
அவ்விவரம் வருமாறு:
திருப்பூர்
திருப்பூர் மாவட்டம் சார்பாக பெரியார் 1000 வினா-விடைப் போட்டியில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசுப் பொருள்களை மாவட்டச் செயலாளர் யாழ்.ஆறுச்சாமி, மாநகர தலைவர்.இல.பாலகிருஷ்ணன், செயலாளர் பா.மா.கரு ணாகரன் புத்தகம் விற்பனையாளர் க.மைனர் ஆகியோர் வழங்கினர்.
காரைக்குடி
காரைக்குடி ராமநாதன் நகராட்சி உயர் நிலைப் பள்ளியில் பெரியார் ஆயிரம் வினா- விடைப் போட்டியில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு பதக்கமும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. நிகழ்வில் காரைக்குடி கழக மாவட்ட தலைவர் ச.அரங்கசாமி, செயலாளர் வைகறை, பள்ளி ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ராஜ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி பெரி.நா.சின்னையா அம்பலம் நினைவு நகராட்சி நடு நிலைப் பள்ளியில் பெரியார் 1000 வினா -விடைப் போட்டித் தேர் வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர் களுக்குப் பதக்கமும், பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் நற்சான்றிதழும் வழங்கப் பட்டன. உடன் மாவட்ட செயலாளர் வைகறை, நகர தி.க செயலாளர் தி.க .கலைமணி ஆகியோர் பங்கேற்றனர்.
கரூர்
கரூர் மாவட்ட திராவிடர் கழகம், பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், பெரியார் சிந்தனை உராய்வு மய்யம், இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா விடை போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ், மற்றும் பதக்கம், பரிசுத்தொகை, அந்தந்த பள்ளியில் வழங்கப்பட்டன. கரூர் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிஎஸ்அய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கரூர் மாவட்ட தலைவர் ஆசிரியர் குமாரசாமி தலைமையேற்று பரிசுத் தொகை, பதக்கம் சான்றிதழ் ஆகியவற்றை வழங்கினார்.
பள்ளிகளுக்கு பெரியார் படம் ஆசிரியர் களிடம் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் முன் னிலை, பொறுப்பு ஏற்ற பொதுக்குழு உறுப்பினர் சே.அன்பு, பகுத்தறிவாளர் கழகத் தலைவர் பொம்மன், மாவட்ட இளைஞரணி தலைவர் அலெக்ஸ் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment