சீர்காழி - தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 15, 2022

சீர்காழி - தரங்கம்பாடியில் மழையால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.1,000

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை,நவ.15- மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி - தரங்கம்பாடி வட்டங்களில் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதார்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.1000 வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்தி: "மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி - தரங்கம்பாடி வட்டங்களில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் ஆயிரம் வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். நேற்று (நவ.14) மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட பின்னர் முதலமைச்சர் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

மேலும், கடும் மழையினால் சேதமடைந்துள்ள பயிர்கள் முறையாக கணக்கெடுப்பு செய்யப்பட்டு, உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment