திருப்பத்தூர், நவ.10 பெரியார் 1000 வினா - விடை போட்டி தேர்வு எழுதியவர்களுக்கு பரிசு அளிக்கும் விழா பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது. கந்திலி ஒன்றிய கழகத் தலைவர் பெ.ரா.கனகராஜ் முன்னிலை யில், கந்திலி ஒன்றிய தி.மு.க. தலைவர் டி.அசோக்குமார், முதல் பரிசு பெற்ற மாணவருக்கு 1,500 ரூபாயும், ஞ.லோகேசு பதக்கமும், கே.தட்சிணாமூர்த்திக்கு இரண்டாம் பரிசாக 1000 ரூபாயும், பதக்கமும், எஸ். சங்கரிக்கு மூன்றாம் பரிசாக 500 ரூபாயும், பதக்கமும் வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் மற்றும் ஜெயசங்கர், வெங்கடேஷ், தி.மு.க. தோழர்கள் சின்னதம்பி, சம்பத், வீரமணி, தினேஷ், விஜயகுமார், ஞானசுந்தரம், ரத்தினம், பாரதி மூர்த்தி அ.தி.மு.க. மேனாள் ஒன்றியக் குழு உறுப்பினர் பாரதி மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.
No comments:
Post a Comment