10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு: நவ.12 இல் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, November 9, 2022

10 சதவிகித இடஒதுக்கீடு தீர்ப்பு: நவ.12 இல் சட்டப்பேரவை அனைத்துக் கட்சித் தலைவர்களின் கூட்டம்

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

சென்னை, நவ.9 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித் துள்ள நிலையில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிக்க வருகிற 12 ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடுஅரசு அறிவித்துள்ளது. 

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னே றிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு முடிவு செய்தது.

உச்சநீதிமன்றத்தில் 40 மனுக்கள் தாக்கல்

கடந்த 2019 ஆம் ஆண்டு இதற்காக 103 ஆவது அரசியல் சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. குடி யரசுத் தலைவர் ஒப்புதலுடன் அந்த சட்டம் அமலில் உள்ளது. இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தம் செல்லாது என்று அறிவிக்கக்கோரி  ‘ஜன்ஹிட் அபியான்', 'யூத் பார் ஈக்குவாலிட்டி' ஆகிய அமைப்புகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன. 

இவர்களுடன் தி.மு.க. சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, விடுதலைச் சிறுத் தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி., உள்ளிட்டோரும் இடையீட்டு மனு தாக்கல் செய்தனர். இதேபோல், மொத்தம் 40 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை விசாரிக்க உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, ஜெ.பி.பார்திவாலா, ஜெ.பி.ரவீந்திர பட், பேலா எம்.திரிவேதி ஆகிய 5 பேர் கொண்ட அரசமைப்புச்  சட்ட அமர்வு, கடந்த செப்டம்பர் மாதத்தில் 7 நாள்கள் பரபரப்பாக விவாதம் நடத்தியது.

தமிழ்நாடுஅரசின் சார்பில் மூத்த வழக்குரைஞர் சேகர் நாப்தே மற்றும் மூத்த வழக்குரைஞர்  பி.வில்சன் எம்.பி. ஆகியோர் பல்வேறு வாதங்களை முன்வைத் தனர். ஒன்றிய அரசு சார்பில் அப்போதைய அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாதிட்டார்.

இரு வேறு தீர்ப்புகள்!

அனைத்துத் தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் கடந்த செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்தனர். இந்நிலையில், உச்சநீதிமன்ற அரசமைப்புச் சட்ட அமர்வு நேற்று முன்தினம் (7.11.2022) 40 மனுக்கள் மீது 4 தனித்தனி தீர்ப்புகளை வழங்கியது. 

இதில், தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதி ரவீந்திர பட் ஆகியோர் 10 சதவிகித இட ஒதுக் கீட்டுக்கு எதிராக தீர்ப்பு அளித்தனர். மற்ற 3 நீதிபதிகளான தினேஷ் மகேஸ்வரி, ஜெ.பி.பார்திவாலா, பேலா எம்.திரிவேதி ஆகி யோர் 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பு அளித்தனர். 

முதலமைச்சர் ஆலோசனை

எனவே, பெரும்பான்மை அடிப்படையில் இட ஒதுக்கீடு செல்லும் என்று அரசமைப்புச் சட்ட அமர்வு உறுதி செய்தது. இந்தத் தீர்ப்பு வெளியான நிலையில், தமிழ்நாடு முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். பின் னர் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர் களுடன் ஆலோசனை நடத்தவும் முடிவு செய்து அறிவித்துள்ளார். 

சட்டமன்ற அனைத்துக் கட்சிக் கூட்டம்

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தகவல் வருமாறு,

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னே றிய வகுப் பினருக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 10 சதவிகிதம் இடஒதுக்கீடு அளிப் பதற்கான வழிவகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்தம், கடந்த 2019ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் நிறைவேற்றப்பட்டது. இந்த இடஒதுக்கீட்டு சட்டத்திற்கு எதிராக தொடரப் பட்ட வழக்கில், பொருளாதாரத்தில் பின்தங் கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் 7.11.2022 அன்று தீர்ப்பு வழங்கி யுள்ளது.

இந்த இடஒதுக்கீட்டு முறை சமூக நீதிக்கும், சமத்துவத் திற்கும் எதிராக அமைவதோடு, சமூகநீதிக் கொள்கைக்கும் மாறானது என்ப தால், இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலை வர்களுடன் விவாதித்து முடிவு எடுப்பதற்கு ஏதுவாக, வருகின்ற 12.11.2022 (சனிக்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில், தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளி கையின் பத்தாவது தளத்தில் உள்ள கூட்ட அரங்கில், சட்டமன்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற வுள்ளது.

இப்பொருள் குறித்து மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளை வழங்க முதல மைச்சர் மு.க.ஸ்டாலின், சட்டமன்ற அனைத் துக் கட்சித் தலைவர்களுக்கும் கடிதம் மூலம் அழைப்பு விடுத்துள்ளார். மேற்படி ஆலோ சனைக் கூட்டத்தில் ஒவ்வொரு சட்டமன்றக் கட்சியின் சார்பாக இரண்டு பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment