சென்னை, நவ.2- தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நவம்பர் முதல் நாள் - எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள் குறித்து வெளியிட்டிருந்த சமூக வலைதளப் பதிவு வருமாறு:
நவம்பர்-1: எல்லைப் போராட்டத் தியாகிகள் நாள்! மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது நாம் இழந்த தமிழர் வாழும் பகுதிகளை, தமிழ் நாட்டோடு மீண்டும் இணைக்கப் போராடிய எல்லைக் காவலர்களின் இணையற்ற தியாகத்தைப் போற்றி நன்றி செலுத்தும் நாள்! சிறையேகி, உயிரீந்து தமிழ்நிலம் காத்த தியாகம் வாழ்க! இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment