சென்னை,அக்.29 கடலோர ஒழுங்கு முறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற்று நேப்பியர் பாலம்-கலங்கரை விளக்கம் இடையே ‘ரோப்கார்’ திட் டத்தை நடைமுறைப்படுத்த நட வடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் தெரிவித்தார்.
பெருநகர சென்னை மாநகராட் சியின் மன்ற கூட்டம் மேயர் பிரியா ராஜன் தலைமையில் மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் நேற்று (28.10.2022) நடந்தது. இதில் துணை மேயர் மகேஷ்குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக, சென்னை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை உறுப்பினரை தேர்வு செய்வ தற்கான தேர்தல் நடந்தது. இதற்கு 68-ஆவது வார்டு உறுப்பினர் அமுதா மட்டும் வேட்புமனு தாக்கல் செய் திருந்தார். இதனால் அவர் போட்டியின்றி உரிய தேர்தல் விதிகளின்படி கவுன்சிலர்களால் தேர்ந்தெடுக்கப் பட்டார்.
சாலையோர வியாபாரிகள்
அதனைத்தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது 152-ஆவது வார்டு உறுப்பினர் பாரதி, 'சாலையோர வியாபாரிகளுக்கு வழங் கப்படும் அடையாள அட்டைக்கு கணக்கெடுக்கும் பணி தனியார் நிறு வனம் மூலம் மேற்கொள்ளப்படுவதாக வும், சம்பந்தப்பட்ட பகுதிகள் குறித்த முழுவிவரம் தெரிந்த வார்டு உறுப் பினர்களிடம் கலந்தாலோசிக்கப்படா மல் இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்படுவதாகவும்' கேள்வி எழுப் பினார்.
அதற்கு, ஆணையர் ககன்தீப்சிங் பேடி, 'தனியார் நிறுவனத்தின் மூலம் தற்போது கணக்கெடுக்கும் பணி மட்டுமே நடைபெறுகிறது. 5 ஆண்டு களுக்கு ஒரு முறை இந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். ஏற்க னவே உள்ள புள்ளி விவரங்களின்படி 30 ஆயிரம் சாலையோர வியாபாரிகள் இருக்கின்றனர். கணக்கெடுக்கும் பணி முடிந்த பிறகு அதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படும். பின்னர், நகர் விற்பனைக்குழு அளிக்கும் சான்றிதழின் அடிப்படையில்தான் அடையாள அட்டை வழங்கப்படும்' என்றார்.
உணவகம்
அதன்பின்னர், நேரமில்லா நேரத் தில், 138-ஆவது வார்டு உறுப்பினர் கண்ணன், 'அம்மா உணவகத்தில் ஊழியர்கள் நேரத்துக்கு சரிவர வருவதில்லை என்றும், அங்கு உணவு வழங்குவதில் குளறுபடி, பதுக்கல் நிகழ்வுகள் நடைபெறுகிறது' என்றும் பேசினார். அதற்கு ஆணையர், 'டோக்கன் முறையை முறைப்படுத்தி அதன்படியே அம்மா உணவகத்தில் உணவுகள் வழங்கவேண்டும் என்பதை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப் படும். அதேபோல், ஊழியர்கள் தவறு செய்தால், அதனை உரிய ஆதாரங் களோடு தெரிவித்தால், அவர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
'ரோப்கார்'
104-ஆவது வார்டு உறுப்பினர் செம் மொழி, 'மெரினா கடற்கரையை யொட்டி, நேப்பியர் பாலம்- _ கலங்கரை விளக்கம் இடையே 'ரோப்கார்' திட்டத்தை கொண்டுவந்தால் நன்றாக இருக்கும். முதலமைச்சரிடம் இதை கொண்டு சென்று இதில் சிறப்பு கவனம் செலுத்தலாம்' என்று ஆலோசனை கூறினார். அதற்கு மேயர் பிரியா, 'இது ஒரு நல்ல திட்டம். கடலோர ஒழுங்குமுறை ஆணையத்திடம் (சி.ஆர்.இசட்.) ஒப்புதல் வாங்கிய பிறகு, மாநகராட்சி சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார்.
கேள்வி மற்றும் நேரமில்லா நேரம் முடிந்ததும், தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதில் பழுதடைந்த பொதுக்கழிப்பிட கட்டடம், அங்கன்வாடி மய்ய கட்டடம், வார்டு அலுவலக கட்டடம், ஆரம்ப சுகாதாரநிலைய கட்டடங்கள் இடிப் பதற்கான அனுமதி உள்பட 70 தீர்மானங்களை மேயர் பிரியா ராஜன், உறுப்பினர்கள் ஒப்புதலோடு நிறை வேற்றினார்.
No comments:
Post a Comment