ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த விரிவுரையாளர் பணி நீக்கம்
வாரணாசி,அக்.1- பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத் தில் வாரணாசியில் காந்தியார் பெயரில் கல்வி நிறுவனம் இயங்கிவருகிறது. மகாத்மா காந்தி காஷி வித்யாபீடம் எனும் அப்பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் பாடத்துக்கான வருகை பேராசிரியராக ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான முனைவர் மித்திலேஷ் குமார் கவுதம் பணியாற்றி வருகிறார்.
அவர் கடந்த 29.9.2022 அன்று தம்முடைய சமூக ஊடகப் பதிவில்,
‘‘நவராத்திரியின் பெயரால் ஒன்பது நாள்கள் விரத மிருப்பதைவிட, ஒன்பது நாள்களும் அரசமைப்புச் சட்டத்தையும், இந்து சட்டத்தையும் படிக்கவேண்டும். அதன்மூலம் அடிமைத்தனத்திலிருந்தும், அச்சத்திலி ருந்தும் விடுபட்டு சுதந்திரத்துடன் பெண்களின் வாழ்க்கை அமையும். ஜெய்பீம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
அவருடைய கருத்து இந்து மதத்துக்கு விரோதமாக இருப்பதாக ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பாகிய ஏபிவிபி பொறுப்பாளர்கள் பல்கலைக்கழகத்திடம் புகார் தெரிவித்தனர்.
அதனைத்தொடர்ந்து பல்கலைக்கழக பதிவாளர் சுனிதா பாண்டே 29.9.2022 அன்று வெளியிட்ட உத்தரவில், முனைவர் மித்திலேஷ் குமார் கவுதமை பணியிலிருந்து நீக்கியதுடன் கல்வி நிறுவன வளாகத்துக்குள்ளேயே நுழையக்கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment