நோயைப் பரப்புவதற்காகவே ஆப்பிரிக்க சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

நோயைப் பரப்புவதற்காகவே ஆப்பிரிக்க சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டன ஒன்றிய அரசு மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடில்லி., அக்.6 கால்நடை களுக்கு தோல் கட்டி நோயை பரப்புவதற்காக ஆப்பிரிக்காவில் இருந்து சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன என காங் கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம் சுமத்தி உள்ளார். 

பிரதமர் மோடியின் பிறந்த நாள் கடந்த மாதம் 17-ஆம் தேதி கொண்டாடப்பட்டது. அதையொட்டி, நமீபியாவில் இருந்து 8 சிறுத்தைகள் விமா னம் மூலம் வரவழைக்கப்பட் டிருந்தன. அந்த சிறுத்தைகளை மத்தியப் பிரதேச மாநிலம் குணோவில் உள்ள தேசிய வன உயிரியல் பூங்காவில் பிரதமர் மோடி திறந்துவிட்டார். நமது நாட்டில் அழிந்துபோன சிறுத்தை இனத்தை மீண்டும் அறிமுகப்படுத்துவதற்காக, ஆப்பிரிக்காவில் இருந்து அய்ந்து ஆண் சிறுத்தை குட்டி களும் மூன்று பெண் சிறுத்தைக் குட்டிகளும் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த நிலையில், ஒன்றிய அரசு, ஆப்பிக்க நாட்டில் இருந்து சிறுத்தைகளைக் கொண்டு வந்து நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுத் துவதாக மராட்டிய காங்கிரஸ் தலைவர் நானா படோலே குற்றம் சுமத்தி உள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறுகையில், லம்பி எனப்படும் தோல் கட்டி நோய் ஆப்பிரிக்க நாடுகளில் நீண்ட காலமாக பரவி வருகிறது. அங்கிருந்தே இந்தச் சிறுத்தைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படுத்துவதற்காக ஒன்றிய அரசு வேண்டுமேன்றே இதனை செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நாடு முழுவதும் மாடுகளுக்கு லம்பி எனப்படும் தோல் கட்டி நோய் பரவி வருகிறது. 15-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் இந்த நோய் பரவி உள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மேலும், இந்த நோய் பரவலை தடுக்க நாடு முழுவதும் கால் நடைகளுக்கு தடுப்பூசி போடும் பணி நடந்து வருவது குறிப் பிடத்தக்கது.


No comments:

Post a Comment