திருச்சி, அக். 2- அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்களின் 144ஆவது பிறந்த நாளினையொட்டி பகுத் தறிவாளர் கழகம் - பகுத்தறிவு ஊடகத்துறை மாநில அளவில் நடத்திய பேச்சுப்போட்டியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் இள நிலை மூன்றாமாண்டு மாணவி ரெ.இலக்கியா “தந்தை பெரியாரும் சமூகநீதியும்” என்னும் தலைப்பிலும் மாணவி அ. ரமீஸ் பாத்திமா “தந்தை பெரியாரும் பெண் விடுதலையும்'' என்னும் தலைப்பிலும் இணையவழியில் கருத்துரையாற்றினர்.
இதில் மாணவி ரெ.இலக்கியா மூன்றாம் பரிசினை வென்று கல்லூரிக்கு பெருமை சேர்த்துள்ளார். பரிசு வென்ற மாணவியை கல்லூரியின் நிர்வாகத்தினர், முதல்வர் முனைவர் இரா.செந் தாமரை, பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்துக் கொண் டனர். தமிழ்நாட்டிலுள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் மாணவி ரெ. இலக்கியா மூன்றாம் பரிசாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ரூபாய் 500 பரிசுத் தொகையினையும் பெற்றார்.
No comments:
Post a Comment