சென்னை, அக்.30 கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில், பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், பெட்ரோல் - -டீசல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த நிலையம் உள்ள நிலத்தை, 2012இல் டாக்டர் சித்ரா என்பவர் விலைக்கு வாங்கினார்.
அந்த நிறுவனம் இடத்தை காலி செய்ய உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ் குமார் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'நிலத்தை விற்றவரிடம் நிறுவனம் செய்த ஒப்பந்தம் 1998இல் முடிந்தது. பின், ஒப்பந்தத்தை புதுப்பிக்கவில்லை; வாடகையும் தர வில்லை; உரிமமும் ரத்தாகி விட்டது. காலியாக இருக்கும் நிலத்தை ஒப் படைக்க, நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும்' என வாதிட்டார்.
நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், 'ஒப்பந்தத்தை புதுப்பிக் காவிட்டாலும், வாடகையை முறையாக செலுத்தி வருகிறோம். 'நிலத்தை வாங்கும் முன், மனுதாரர் தரப்பில் தகவல் தெரிவிக்கவில்லை. நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்ற குற்றச்சாட்டும் எழுகிறது. எனவே, இந்த நிலத்தை காலி செய்யும்படி கோர முடியாது' என வாதிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
நிலத்துக்கு வாடகை தொகையை செலுத்தி வருவதாக நிறுவனம் கூறி னாலும், அதற்கு ஆதாரமாக ஒரு துண்டு பேப்பரை கூட தாக்கல் செய்யவில்லை. கடந்த 1964 முதல் 1998 வரை, சொற்பத் தொகையை வாடகையாக கொடுத்து, நிலத்தை நிறுவனம் அனுபவித்து வந்துள்ளது.
சொத்து மூன்றாம் நபருக்கு விற் பனை செய்யப்படும் முன், தங்களுக்கு முன்கூட்டியே தெரிவிக்கவில்லை என, எதிர்மனுதாரர் கூற முடியாது. சொத்தின் பத்திரப்பதிவு என்பதே ஒரு வகையில் அறிவிப்பு தாக்கீதுதான்.
வாடகை கொடுத்ததற்கான ஆதாரம் எதுவும் தாக்கல் செய்யாதபோது, நிறுவனம் சொத்துக்குள் அத்துமீறி நு-ழைந்து இருப்பதாகவும், நிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வருவ தாகவும் தான் அர்த்தம். ஒப்பந்தத்தை 1998க்கு பின் புதுப்பிக்கவில்லை என்றால், தொடர்ந்து அந்த நிலத்தை அனுபவிக்க முடியாது பதில் மனுவில் எதுவும் கூறாமல், வாதத்தின்போது, நிலம் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என, எதிர்மனுதாரர் கூறுவதை ஏற்க முடியாது.
வாடகை கொடுக்காமல், ஒப்பந் தத்தை புதுப்பிக்காமல், வாடகை நிலத்தில் இருந்தால் அது சட்டவிரோதம்; அத்துமீறி குடியிருப்பதாகத்தான் அர்த் தம். எனவே, இரண்டு மாதங்களுக்குள் சொத்தை மனுதாரர் வசம் நிறுவனம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment