செய்திச் சுருக்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 29, 2022

செய்திச் சுருக்கம்

தேர்வு

சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினராக தி.மு.க. கவுன்சிலர் அமுதா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அனுமதி

நடப்பாண்டின் நெல் கொள்முதல் சீசனில் தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசிடம் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய கேட்ட நிலையில் 19 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய அனுமதி அளித்துள்ளது.

மானியம்

நியாய விலைக்கடை நடத்தும் கூட்டுறவு சங்கங் களுக்கு ரூ.195 கோடி மானியம் தமிழ்நாடு அரசு வழங்கி யுள்ளதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு ஊழியர்கள் சங்கத்தினர் நன்றி!

சிறப்பு முகாம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நவம்பர் மாதம் 4 நாள்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளதாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தலைமை தேர்தல் அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.

மனிதர்களை...

விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் இன்ஜின் பரிசோதனை நெல்லை மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் வெற்றிகரமாக நடந்தது.

செல்லாது

வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் ஆன்லைனில் படித்து பெறும் டாக்டர் பட்டம் செல்லாது என யுஜிசி, ஏஅய்டிஇ தெரிவித்துள்ளது.

தளர்த்த...

சேட்டிலைட் டி.வி. சேனல் ஒளிபரப்பு தொடர்பான செயற்கைக்கோள் கட்டுப்பாடுகளை இன்னும் ஒரு மாதத்தில் தளர்த்த இருப்பதாக ஒன்றிய தகவல் ஒளிபரப்பு துறை செயலாளர் தகவல்.

காய்ச்சல்

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவியுள்ள நிலையில், பன்றிகளுக்கு ஆப்ரிக்க காய்ச்சல் பரவி வருவது மேலும் மக்களிடம் கவலையை அதிகரித்துள்ளது.

இல்லையாம்!

நாள்தோறும் பயணிகள் ரயிலை இயக்குவதால் ரயில்வே துறைக்கு எந்த லாபமும் கிடைக்கவில்லை. நட்டம் தான் ஏற்படுகிறது. ஒரு ரூபாய் செலவு செய்தால், 55 காசுகள் நட்டமாகிறது என ஒன்றிய ரயில்வே இணை அமைச்சர் ராவ் சாகேவ் தனவே தகவல்.


No comments:

Post a Comment