ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சாதாரண குடிமகனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 3, 2022

ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் சாதாரண குடிமகனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்!

 திருச்சி, அக்.3 ஒன்றிய அரசின் தவறான பொருளாதாரக்கொள் கையால் படுபாதாளத்தில் வீழ்ந்து போன  நிதிநிலமையை சரிசெய்ய வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்தி உள்ளது.  இதனால் சாதாரண குடிமகனின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று பொது மக்கள் தெரிவித்தனர். 

 வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் களுக்கான வட்டி விகிதத்தை (ரெபோ ரேட்) 0.5 சதவீதம் அதி கரித்துள்ளது. இதனால் ரெபோ ரேட் 5.4 சதவீதத்தில் இருந்து 5.9 சதவீதமாக உயர்ந்துள்ளது. இத னால் வங்கிகளில் வாடிக்கையா ளர்களுக்கு வழங்கப்படும் கடன் களின் வட்டிவிகிதம் அதிகரிக் கும். இந்த அதிகரிப்பு குறித்து பொது மக்கள் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:

''வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய கால கடன் களுக்கான வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தி உள்ளது. இதனால் தேசியமயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகளில் வீட்டு கடன், வாகன கடன், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும்.  இந்த உத்தரவை வங்கிகள் அடுத்ததாக அமல் படுத்தும். ஏற்கனவே கடன் வாங் கியவர்கள் வட்டியை செலுத்து வதற்கு நிரந்தர வட்டி அல்லது மாறுபடும் வட்டி (பிளோட்டிங்) விகிதத்தில் செலுத்த விருப்பம் தெரிவித்திருப்பார்கள். அந்த அடிப்படையில் வட்டியை செலுத்துவது உண்டு. இதில் தவணை காலத்தை அதிகரிப்பது அல்லது வட்டிக்கான தவணை தொகையை அதிகரித்தல் என்பதில் வங்கிகளுக்கு வேறு படும். இதில் வாக்கையாளர் களி டமும் விருப்பம் கேட்டு அதற் கேற்ப சில நேரங்களில் வங்கிகள் செயல்படும். கடனுக்கான வட்டித் தொகையை உயர்த்து வதில் வாடிக்கையாளர்களுக்கு சற்று பாதிப்பு தான். அதே நேரத் தில் நிரந்தர வைப்பு தொகைக் கான வட்டி விகிதமும் உயரும். இதனால் நிரந்தர வைப்பு தொகை செலுத்தியவர்கள் பயன் பெறுவார்கள் ''   வட்டி விகிதம் 0.5 சதவீதம் கூடுதல் முடிவு என்பது சாதாரண மக்களை பாதிப்பதாக உள்ளது. நாடு முழுவதும் வேலையில்லா திண் டாட்டம் உள்ள நிலையில் சாதாரண குடிமகனின் வாழ் வாதாரம் பாதிக்கும். இன்றைய காலத்தில் வங்கிக்கடன் பெற்று வீடு கட்டியுள்ளவர்கள், தவணை செலுத்துவதில் கூடுதல் வட்டி ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றார். மறுபரி சீலனை செய்ய வேண்டும் 

பணவீக்கத்தை கட்டுப்படுத்த எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் பொழுது வட்டி விகிதம் உயர்வு என்பது நடுத்தர மற்றும் ஏழைமக்களை பெரிதும் பாதிக்கும். கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தியதால் இரு சக்கர வாகனத்திற்கு மாதாந்திர கடன் தவணை செலுத்தும்   நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக் கப்படுவர். ஆகவே கடனுக்கான வட்டிவிகிதத்தை உயர்த்தியதை மறுபரிசீலனை செய்து மாற்று வழியை செயல்படுத்த வேண்டும்  என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.


No comments:

Post a Comment