மூடத்தனத்தின் முடைநாற்றம் பாரீர்! கிரகணத்தைக் கண்டு கடவுள் பயப்படலாமா?
சூரிய கிரகணம், சந்திர கிரகணம் என்பவை பற்றி அறிவியல் தெளிவாக விளக்கம் கூறி, வகுப்பில் பாடங்களாய் சிறு பிள்ளைகளுக்குக் கூடச் சொல்லிக் கொடுக்கும் நிலையில்,
ஓ, பக்த கோடிகளே!
அந்தக் கிரகணத்திற்காக கோவிலை ஏன் மூடுகிறீர்கள்?
கடவுளை ராகு, கேது பாம்புகள் விழுங்கி ‘‘ஜீரணம்'' செய்துவிடாமல் காப்பதற்குத்தானே!
அட, மவுடீகங்களே, உங்களுக்குப் பொறி தட்ட ஒரே ஒரு கேள்வி.
கடவுள் சர்வ சக்தி (Omnipotent) படைத் தவன் என்றால், கேவலம் ராகு, கேது பாம்பு களுக்கு இப்படி பயப்படும் நிலை தேவையா? நியாயமா?
ராகு, கேதுவுக்குப் பயந்து ஏன் ‘கோவில் நடை' சாத்துகிறீர்கள்? சக்தியற்றவரா உங்கள் கடவுள்?
ஒவ்வொரு கடவுள் கையிலும் ஒரு கொலை ஆயுதம் உண்டே!
சங்கு சக்கரம், திரிசூலம், தண்டாயுதம், வேல், வில் இவை இருக்கும்போது, ஏன் பயப்படவேண்டும்?
அவரால் அந்த ‘‘ராகு, கேது''க்களை அழித்துவிட முடியாதா?
திருப்பதி கோவிலும் கிரகணத்திற்காக மூடப்படுகிறதாம்!
‘‘தீராத வினையெல்லாம் தீர்த்து வைக்கும் கோவிந்தனுக்கே'' இப்படி! ‘‘கோவிந்தா, கோவிந்தா'', ‘‘மூடு, மூடு'' என்று மூடுவதா?
பகுத்தறிவுப்படி சிந்தித்தால், இதைவிட கேலிக் கூத்து வேறு என்ன இருக்க முடியும்?
''பக்தி வந்தால் புத்தி போகும் -
புத்தி வந்தால் பக்தி போகும்!''
- தந்தை பெரியார்
No comments:
Post a Comment