காரைக்குடி பகுத்தறிவாளர் சுப. பரமசிவம் எழுதிய “திருக்குறள் மெய்யுரை” நூலை, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வெளியிட்டார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

காரைக்குடி பகுத்தறிவாளர் சுப. பரமசிவம் எழுதிய “திருக்குறள் மெய்யுரை” நூலை, அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வெளியிட்டார்

காரைக்குடி அக். 21 காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் தலைவரும், சீரிய சுயமரியாதைக்காரருமான  நகை வணிகர் சுப. பரமசிவம் தனது தமிழ்மொழிப் பற்றுதலா லும் “திருக்குறள்” நூலில் 1330 குறளுக்கும், சிந்தனைக்குரிய கருத்தினை மய்யமாக வைத்து கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக “கருத்துரையுடனும் பதவுரையும் இணைத்து எழுதிய சுமார் 750 பக்கம் கொண்ட “திருக்குறள் மெய்யுரை” எனும் நூலினை வெளியிடும் விழா, காரைக்குடி நகரில் எம்ஏஎம். மகாலில் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் வெளி யிட்டு பாராட்டிப் பேசினார்கள்.

அக். 16 ஞாயிறு மாலையில் நடந்த “திருக்குறள் கருத்தரங்கம்” காரைக்குடி நகர்மன்றத் தலை வர் சே. முத்துத்துரை தலைமையி லும், நகைக்கடை அதிபர் எம். எஸ்.பி. தெய்வசிகாமணி, நகை வணிகர் சங்கத்தலைவர் எம்.எஸ்.பி. இராகவன், செயலாளர் வீர. இராமச்சந்திரன், வணிகவரி அலுவலர் குணசேகரன் ஆகி யோர் முன்னிலை வகித்தார்கள், தொழில் வணிகக்கழகத் தலை வர் சாமி திராவிட மணி வரவேற் புரையாற்றினார். “திருக்குறள் மெய்யுரை” நூலை திராவிட இயக்கத்தழிர் பேரவை பொதுச் செயலாளர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், “நக்கீரன்” இதழ் இணையாசிரியர் கோவி. லெனின் ஆகியோர் அறிமுகம் செய்து விளக்கிப் பேசினார்கள். நகர தி.மு.க. செயலாளர் நா. குணசேக ரன் வாழ்த்திப் பேசினார். விழாக் குழுவின சார்பில் அ. இராசரெத் தினம் நன்றி கூறினார்.


No comments:

Post a Comment