மூடநம்பிக்கையின் மூர்க்கத்தனம் புதையல் ஆசையால் நரபலி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 1, 2022

மூடநம்பிக்கையின் மூர்க்கத்தனம் புதையல் ஆசையால் நரபலி!

ஒசூர், அக்.1 விவசாயி மரண மடைந்த வழக்கில் திடீர் திருப்பமாக புதையல் ஆசை யால் அவரை நரபலி கொடுத்த கொடூரம் தெரியவந்தது. இதுதொடர்பாக நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர்.  

கிருஷ்ணகிரி மாவட்டம் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது 52), விவசாயி. இவரு டைய மனைவி லட்சுமி 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 28-ஆம் தேதி வீட்டின் அருகே வெற்றிலை தோட் டத்தில் 1லு அடி ஆழ குழியில்  லட்சுமணன் இறந்து கிடந்தார். குழியின் முன்பு வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை பழம், மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட பூஜை பொருட்கள், அறுத்த கோழி மற்றும் மண் வெட்டி கிடந்தது. லட்சுமணனின் மரணம் குறித்து கெலமங் கலம் காவல்துறையினர் வழக் குப்பதிவு செய்து விசாரித் தனர்.   இதில் லட்சு மணனின் நண்பரான தர்மபுரி மாவட் டம் முருங்கைமர தரிசு கிராமத்தை சேர்ந்த மணி (65) என்பவர் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதை யடுத்து  மணியை காவல்துறையினர் கைது செய்தனர். அவர் காவல்துறையிடம் கொடுத்த  வாக்குமூலத் தில் கூறியிருப்பதாவது:- கொலையான லட்சுமணனும், நானும் கடந்த காலத்தில் ஒன்றாக வேலை செய்தோம். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு லட்சுமணனின் மகளுக்கு பேய் பிடித்திருந்ததால் பேய் ஓட்டுவதற்காக தர்மபுரி மாவட்டத்தில் இருந்து சிரஞ்சீவி என்ற சாமியார் வந்தார். அவர் பேய் ஓட்டிவிட்டு செல்லும்போது வெற்றிலை தோட்டத்தில் குறிப்பிட்ட இடத்தில் புதையல் இருப் பதாக கூறினார். அதை எப் படியும் எடுக்க வேண்டும் என லட்சுமணனுக்கு ஆசை ஏற் பட்டது. அதனால் என்னை தொடர்பு கொண்டான்.

 எனக்கும் புதையல் மீது தீராத ஆசை ஏற்பட்டது. நரபலி கொடுத்தால் தான் புதையல் கைக்கு கிடைக்கும் என சாமியார் கூறியதை லட்சுமணன் என்னிடம் கூறினான். அதனால் யாரை நரபலி கொடுப்பது என யோசித்து வந்தோம். அந்த நேரத்தில் தான் புதூர் கிராமத்தை சேர்ந்த ராணி என்ற பெண் தனக்கு பேய் ஓட்டவேண்டும் என லட்சு மணனிடம் வந்தார். அதனால் அவரை பலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தோம். அதற்காக சம்பவத்தன்று ராணியை வெற்றிலை தோட்டத்திற்கு வருமாறு லட்சுமணன் கூறியிருந்தான். புதையல் இருப்ப தாக கூறப்படும் இடத்தில்   குழியும் தோண்டி விட்டோம்.  ஆனால் எதிர் பார்த்தபடி ராணி அங்கு வரவில்லை. அந்த நேரத்தில் புதையலை தான் மட்டும் அடைய வேண்டும் என நினைத்த லட்சுமணன் என்னை நரபலி கொடுக்கும் நோக்கத்தில் கழுத்தில் கடிக்க வந்தான். இதனால் சுதாரித்துக் கொண்ட நான் அவனை கொலை செய்து நரபலி கொடுத்து புதையலை எடுக்க முடிவு செய்தேன். அதன்படி கட்டையால் தலை யில் அடித்து லட்சுமணனை கொலை செய்தேன். 

ஆனால் நரபலி கொடுத் தும் பூஜைகள் செய்தும் புதையல் கிடைக்க வில்லை. அதனால் அங்கி ருந்து தப்பியோடி விட்டேன். இவ்வாறு அவர் காவல்துறையிடம் கூறி உள்ளார்.


No comments:

Post a Comment