சிறுமிக்கு எதிராக ஆபாசப் பேச்சு: இளைஞருக்கு ஒன்றரை ஆண்டு சிறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

சிறுமிக்கு எதிராக ஆபாசப் பேச்சு: இளைஞருக்கு ஒன்றரை ஆண்டு சிறை

மும்பை, அக் 28- மராட்டிய மாநிலத்தில் சிறுமியிடம் தகராறு செய்ததுடன், அச் சிறுமியை ஆபாசமாக பேசிய இளைஞர் மீது தொடரப்பட்ட வழக்கில் அவ்விளை ஞருக்கு ஒன்றரை ஆண்டு சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான வன்முறை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பெண்களின் பிரச்சினைகள் தொடர்பாக தொடர்ப்படும் வழக்குகளில் நீதிமன்றம் தனிக் கவனம் செலுத்த வேண்டும் என பெண்கள் அமைப்பினர் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக இந்திய அரசமைப்பு சட் டம் 15(3) பிரிவின்படி பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலன் கருதி, சிறப்பு ஏற்பாடு செய்யச் சட்டம் அனுமதிக்கிறது. எனவே அவற்றைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கவேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

மராட்டிய மாநிலத்தின் மும்பை பகுதி யில் கடந்த 2015ஆம் ஆண்டும் 16 வயது சிறுமி ஒருவர் பள்ளி முடிந்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது இரு சக்கர வண்டியில் வந்த இளைஞர் ஒருவர் சிறு மியைக் கிண்டல் செய்துள்ளார். அதோடு தலை முடியை பிடித்து இழுத்து அச் சிறுமியிடம் தகராறு செய்துள்ளார்.

இதனால் சிறுமிக்கும் இளைஞருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், அந்த இளைஞர் பாலியல் ரீதியில் இழிவுபடுத்தி சிறுமியை அழைத் துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருடன் அப்பகுதி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதுதொடர்பான வழக்கு மும்பை சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் சிறப்பு நீதிபதி எஸ்.லே அன்சாரி விசாரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 23.10.2022 அன்று வழக்கு விசாரணை முடிந்து  நீதிபதி தனது இறுதி தீர்ப்பை வழங்கினார்.

அப்போது நீதிமன்றம் வழங்கிய தீர்ப் பில், “குற்றம் சாட்டப்பட்ட நபரால் சிறுமிக்கு பாலியல் ரீதியான தொந்தரவு அளிக்கப் பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. குற் றம் சாட்டப்பட்டவரை காலம் தாழ்த்தாமல் தண்டனை வழங்குவது அவசியமான ஒன்று.

அதன்படி சிறுமியை பாலியல் ரீதியாக இழிவான சொல்லால் அழைத்த 25 வயது இளைஞருக்கு 18 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பெரும் பாலான இளைஞர்கள் பெண்களை இது போன்ற வார்த்தைகளை பயன்படுத்துவது வாடிக்கையாகி விட்டது,  இது பெரும் வேதனைக்குரிய விசயமாகும்” எனத் தெரிவித்துள்ளார். மும்பை போக்சோ நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை பெண்கள் அமைப்பினர் பெரிதும் வரவேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment