லண்டன், அக்.6 திறன்பேசிகள் டேப்லட் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்களுக்கு ஒரே வகையான சார்ஜர் இருக்கும் என கூறப் பட்டுள்ளது. அனைத்து மின்னணு சாதனங்களுக்கும் டைப்-சி வகையில் ஒரே சார்ஜர் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கும் சட்டம் அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட் டுள்ளது. இது குறித்து அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த புதிய சட்டத்திற்கு ஆதரவாக 602 வாக்குகளும், எதிராக 13 வாக்குகளும் பதிவானதாக தெரிவிக் கப்பட்டுள்ளது. மேலும் 8 உறுப்பினர்கள் வாக் கெடுப்பை புறக்கணித்ததாக அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது. இந்த சட்டத் தின்படி திறன்பேசிகள், டேப்லட் உள்ளிட்ட பல் வேறு மின்னணு சாதனங்களுக்கு ஒரே வகையான சார்ஜர் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த சட்டம் 2024-ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்றப்பட உள்ளதாக அய்ரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment