அனுமதி
பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டு மாணவர்களின் சேர்க்கைக்காக, கூடு தலாக 25 சதவீத இடங்களை உருவாக்கலாம் என பல்கலைக்கழக மானியக்குழு அனுமதி அளித்துள்ளது.
கெடு
தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படும் விவகாரத்தில் அக்டோபர் 14ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
விளம்பரம்
நீதிமன்றம் என்பது விளம்பரம் தேடக்கூடிய இடமல்ல என வழக்கு ஒன்றில் மனுதாரரை உச்சநீதி மன்ற நீதிபதிகள் கண்டித்தனர்.
ரயில்வே
நாள்தோறும் 2.23 கோடி மக்கள் பயணிக்கும் ரயில்வே துறையின் புதிய ரயில்வே கால அட்டவணையை "ரயில்கள் ஒரு பார்வை" (ஜிகிநி) என்ற பெயரில் வெளியிட்டுள்ளது.
திறப்பு
கருநாடகாவில் இருந்து கடந்த 4 மாதங்களில் தமிழ்நாட்டிற்கு 450 டிஎம்சி தண்ணீர் திறக்கப்பட்டதாக கருநாடக நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த் கார்ஜோன் தெரிவித்துள்ளார்.
தளர்வு
அதிமுக தலைமை அலுவலகத்தில் மோதல் வழக்கில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந் தனைகளை தளர்த்தி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசாணை
தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் இணை இயக்குநர்களை பணியிட மாற்றம் செய்தும், கூடுதல் பொறுப்புகளை வழங்கியும் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு.
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு வே¬வாய்ப்பு - பயிற்சித் துறை சார்பில் 15.10.2022 அன்று சென்னை ராயப்பேட்டை நியூ கல்லூரியில் தனியார் துறையில் 50,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களைப் பூர்த்தி செய்ய வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும்.
உயர்வு
வங்கிகளுக்கான குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவிதம் உயர்த்தி ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அறிவித்துள்ளார்.
தடுப்பூசிகள்
நாடு முழுவதும் 75 நாள்களாக மேற்கொள்ளப்பட்ட முன்னெச்சரிக்கை தடுப்பூசி முகாமில் 16 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment