துறையூர் பாலக்கரையில் தந்தை பெரியார் பட ஊர்வலம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 6, 2022

துறையூர் பாலக்கரையில் தந்தை பெரியார் பட ஊர்வலம்

துறையூர், அக். 6-- 17.9.2022 அன்று மாலை 6 மணிக்கு துறையூர் பாலக்கரையில் பெரியார் 144 ஆவது பிறந்த நாள் பட ஊர் வலம் துவங்கியது. 

ஊர்வலத்திற்கு திருச்சி மண்டல திராவிடர் கழக செய லாளர் துறையூர் ச.மணிவண் ணன் தலைமை தாங்கினார். 

ஆசிரியரணி. அ. சண்முகம். இளைஞரணி. ச. மகாமுனி. முன்னிலை வகித்தனர். மெய் யம்பட்டி கோபி அதிரடி தப் பாட்டத்துடன் ஊர்வலம் புறப்பட்டு பெரம்பலூர் சாலை. சிலோன் ஆபீஸ். மார் கெட்திருச்சிசாலை வழியாக துறையூர் பேருந்து நிலையம் முன்பு வந்தடைந்தது. ஊர் வலத்தில் திருச்சி மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர். தர் மன், ராஜேந்திரன், நகர் மன்ற தலைவர் செல்வராணிமலர் மன்னன்,  நகர திமுக செய லாளரும் நகர் மன்ற துணைத் தலைவரும் திருச்சி மாவட்ட அறங்காவலர் குழு தலை வருமான மெடிக்கல். ந. முரளி, திமுகவின் ஒன்றிய செய லாளர்கள் இள.அண்ணா துரை, வீரபத்திரன், சரவணன், ஆதிதிராவிடர் நல குழு தலை வர். கஸ்டம்ஸ், மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் மதியழ கன், வழக்குரைஞர் பழனிவேல், அரசு வழக்குரைஞர் ஜெய ராஜ், வழக்குரைஞர். ரத்தினம், வழக்குரைஞர் ம.கண்ணன், ஆட்டோ அழகு மலை, விடு தலை சிறுத்தை கள் கட்சி ஒன் றிய செயலாளர் மொழி, சிவா, நகர செயலா ளர் மீசை.குமார். ஆசிரியர்கள் மு.முத்து செல் வன், வெளி.முரு கானந்தம், சி. சத்தியசீலன், இர மேஷ், கோர்ட் பாலகிருஷ்ணன், கோர்ட் நந்த குமார், பாரதி, பாலு, வரதராஜன், லோகு, தினேஷ் பாபு, இளையராஜா, மு.தினேஷ், செ.செந்தில் குமார், த.ரஞ்சித், சரண் ராஜ்,  சரண் தன்ராஜ்,  நா.தினேஷ், குணராஜன், போட்டோ  குணா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட னர். தந்தை பெரியாரின் 8 அடி உயர படம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு தோழர்கள் கழகக் கொடிய ஏந்தி சுமார் 3 கி. மீ. தூரம் துண்டுஅறிக்கைகளை கொடுத்து சிறப்பாக வரப்பட்டு, பேருந்து நிலையத்தில் மக்க ளுக்கு பிரியாணி வழங்கப்பட் டது. பின்னர் துறையூர் விநாயகர் தெருவில் பொது மக்களுக்கு பிரியாணி வழங்கப்பட்டது. இரவு 10 மணிக்கு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

No comments:

Post a Comment