திருப்பத்தூர், அக். 21- திருப்பத் தூர் மாவட்ட கழக கலந் துரையாடல் கூட்டம் 17.10.2022 அன்று நடை பெற்றது. இக் கூட்டத் திற்கு மாவட்ட தலைவர் கே.சி.எழிலரசன் தலைமை வகித்தார்.
இதில் மாநில அமைப் பாளர் இரா.உரத்த நாடு குணசேகரன், அமைப்புச் செயலாளர் ஊமை ஜெய ராமன், அமைப்புச் செய லாளர் வி.பன்னீர்செல் வம் ஆகியோர் பங்கேற்ற னர். மேலும், மாநில மகளிரணி பொருளாளர் ஏ.அகிலா, மாவட்ட இணைச்செயலாளர் பெ. கலைவாணன், மண்டல இளைஞரணி செயலா ளர் ஏ. சிற்றரசு, மாவட்ட இளைஞரணி செயலா ளர், ஜிம் சுரேஷ், நகர தலைவர் தோழர் காளி தாஸ், மாவட்ட தொழி லாளரணி தலைவர் பன் னீர், மாவட்ட தொழிலா ளரணி செயலாளர் மோகன், கந்திலி ஒன்றிய தலைவர் கனகராஜ், நகர அமைப்பாளர் முருகன் மற்றும் ராஜேந்திரன், பெரியார் செல்வம், குழந்தை யேசு, சங்கர் என்று ஏராளமான தோழர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
இக் கூட்டத்தில் கீழ்க் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது
1. 08.10.2022 அன்று சென்னையில் நடை பெற்ற தலைமைச் செயற் குழு கூட்டத்தின் தீர் மானங்களை செயல்படுத் துவது என இக் கூட்டம் முடிவு செய்யப்பட்டது.
2. அறிவுலக பேரசன் தந்தை பெரியார் 144ஆம் பிறந்த நாள் விழா, ஆர். எஸ். எஸ் எனும் டிரோ ஜன் குதிரை நூல் அறிமுக விழா நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது.
3. திருப்பத்தூர், சோலை யார்பேட்டை, வாணியம் பாடி, ஆம்பூர், சட்ட மன்றத் தொகுதிகளில் உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக்கள் சேர்த்து தமி ழர் தலைவர் அவர்களின் 90 ஆவது பிறந்த நாள் பரிசாக வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது.
4. 22.10.2022 அன்று காலை 10.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்திற்கு வருகை தரும் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜை மிகச்சிறப்பாக வரவேற் பது என முடிவு செய்யப் படுகிறது.
5. கழக பொறுப்பா ளர்கள் வீ. அன்பு ராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறும் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்திற்கு அனைத்து அணி பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் குறித்த நேரத்தில் பங்கேற்று சிறப்பிக்குமாறு இக்கூட் டம் கேட்டுக் கொள்ளப் படுகிறது.
இந்த 5 தீர்மானங்கள் இக் கூட்டத்தில் நிறை வேற்றப்பட்டது. இறுதியாக முத்து நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment